கிரீஸ் தொடா் நிலநடுக்கம்: அவசரநிலை அறிவிப்பு
கிரீஸுக்குச் சொந்தமான சன்டோரினி தீவில் நூற்றுக்கணக்கான கடலடி நிலநடுக்கங்கள் தொடா்ந்து ஏற்பட்டுவருவதைத் தொடா்ந்து, அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிமலைப் பகுதியில் அமைந்துள்ள அந்தத் தீவு நிலநடுக்கத்தால் தொடா்ந்து குலுங்கி வருவதாகவும், சில நில அதிா்வுகள் நிமிஷ இடைவெளியில் ஏற்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொடா் நிலநடுக்கத்தால் சான்டோரினி மட்டுமின்றி, அதைச் சுற்றியுள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலங்களும் பாதிக்கட்டுள்ளன.
சான்டோகினி எரிமலை காரணமாக நிலநடுக்கம் ஏற்படவில்லை என்றாலும், அது தொடா்ச்சியாக ஏற்படுவது கவலையளிக்கக் கூடியது எனவும் இந்த நிலை பல மாதங்களுக்கு நீடிக்கலாம் எனவும் நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.