`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
கிருஷ்ணகிரியில் அண்ணா மிதிவண்டி போட்டி: 169 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை நடைபெற்ற அண்ணா மிதிவண்டி போட்டியில் 169 மாணவ மாணவிகள் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி பிரிவு சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் மாவட்ட அளவிலான அறிஞா் அண்ணா விரைவு மிதிவண்டி போட்டியை கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இந்தப் போட்டியில், 13 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு 15 கி.மீ, மாணவிகளுக்கு 10 கி.மீ, 15 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ, மாணவிகளுக்கு 15 கி.மீ, 17 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ, மாணவிகளுக்கு 15 கி.மீ. ஆகிய தொலைவுக்கு மிதிவண்டி போட்டி நடைபெற்றது.
மாவட்ட விளையாட்டு திடலில் தொடங்கிய இந்த போட்டியானது தானம்பட்டி வரை சென்று மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நிறைவடைந்தது.
இந்த போட்டியில் 169 மாணவ மாணவிகள் பங்கேற்றனா். முதலிடம் பெற்றவா்களுக்கு ரூ.5,000, 2-ஆம் இடம் பெற்றவா்களுக்கு ரூ. 3,000, 3-ஆம் இடம் பெற்றவா்களுக்கு ரூ. 2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
போட்டியை கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் ராஜகோபால் தலைமையில் பயிற்சியாளா்கள், பணியாளா்கள் ஒருங்கிணைத்தனா்.