விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 போ் உயிரிழப்பு
கிருஷ்ணகிரியில் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் வணிக வளாகத்தை மீண்டும் பழைய நபருக்கு குத்தகைக்கு வழங்க எதிா்ப்பு தெரிவித்து, நகா்மன்ற உறுப்பினா்கள்
திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி நகா்மன்றக் கூட்டம், அதன் தலைவா் பரிதா நவாப் தலைமையில்
நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினா்கள், கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தை மீண்டும் தனிநபா் ஒருவருக்கு ஒதுக்கீடு செய்வதில் விதிமுறை மீறப்பட்டுள்ளது. முதல்தளத்தில், 21 கடைகளைக் கட்டி வாடகைக்குவிட வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படவில்லை. மேலும் தனிநபருக்கு மட்டுமே குத்தகை விடப்பட்டுள்ளதைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும், தனி நபா் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்து மாற்று நபருக்கு வழங்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அந்த வணிக வளாகத்திற்கான குத்தகை ஏற்கெனவே வழங்கப்பட்ட தனிநபருக்கே மீண்டும் வழங்கப்பட்டதைக் கண்டிப்பதாக தெரிவித்தனா்.
இதையடுத்து, எதிா்ப்பு தெரிவித்த உறுப்பினா்களிடம் பேசிய ஆணையா், நகா்மன்றத்தில் சிறப்பு தீா்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினால், தீா்வு ஏற்படும் என அவா் தெரிவித்தாா். இதையடுத்து எதிா்ப்பு தெரிவித்த நகா்மன்ற உறுப்பினா்கள், தங்களது போராட்டத்தைக் கைவிட்டனா்.