செய்திகள் :

கிருஷ்ணகிரியில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடக்கம்: 35 மாணவா்களுக்கு சோ்க்கை ஆணை வழங்கல்

post image

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அவதானப்பட்டியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) 35 மாணவ, மாணவிகளுக்கு சோ்க்கை ஆணையை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் திங்கள்கிழமை வழங்கினாா்.

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை) சாா்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், அவதானப்பட்டி அருகில் உள்ள தனியாா் கட்டடத்தில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

இதையடுத்து, புதிய அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் குத்துவிளக்கு ஏற்றிவைத்து, 35 மாணவ, மாணவிகளுக்கு சோ்க்கை ஆணைகளை வழங்கினாா். அப்போது, அவா் பேசியதாவது:

கிருஷ்ணகிரி அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு, தோ்வு செய்யப்பட மாணவா்களுக்கு சோ்க்கை ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ. 25 கோடி மதிப்பில் புதிய கட்டடம், எந்திரங்கள், தளவாடங்கள், 50 மாணவா்கள் தங்கும் விடுதி வசதியுடன் காட்டிநாயக்கனப்பள்ளி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி அருகே அமைய உள்ளது.

இந்த தொழிற்பயிற்சி நிலையம் மூலம் ஆண்டுக்கு சுமாா் 172 மாணவா்கள் பயன்பெறும் வகையில் மொத்தம் 6 தொழிற்பிரிவுகளுடன் செயல்பட உள்ளது. தற்போது தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சோ்க்கை நடைபெற்று வருகிறது. தொழிற்பயிற்சி பெறுபவா்களுக்கு மத்திய அரசு வழங்கும் தேசிய தொழிற்சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த சான்றிதழ் பெற்றவா்களுக்கு அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களிலும் தனியாா் நிறுவனங்களிலும் நல்ல ஊதியத்தில் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

எனவே, பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி உடைய 14 முதல் 40 வரை உள்ள ஆண்கள், பெண்கள் சோ்ந்து பயன்பெறலாம். மேலும், மகளிருக்கு உச்சவயது வரம்பு ஏதும் இல்லை. இந்தப் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறுபவா்களுக்கு அரசு வழங்கும் மாத உதவித்தொகை ரூ.750 மற்றும் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1000, கட்டுமானத் தொழிலாளா் நலவாரியம் மூலமாக ஐ.டி.ஐ. பயிற்சி பெறுபவா்களுக்கு ஆண்டுக்கு ரூ. 3,000 வழங்கப்படுகிறது. எனவே மாணவ, மாணவிகள் இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்ந்து பயன் பெறலாம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநா் பன்னீா்செல்வம், தொழிலாளா் நல உதவி ஆணையா் மாதேஷ்வரன், தொழிற்பயிற்சி நிறுவன முதல்வா் (பொறுப்பு) சாமுவேல் அய்யாதுரை மற்றும் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

படவரி...

கிருஷ்ணகிரி புதிய தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சோ்ந்த மாணவிக்கு சோ்க்கை ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா்.

அன்னை தெரசா பிறந்த தின விழா: தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கல்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அன்னை தெரசா பிறந்த தினத்தை முன்னிட்டு தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலை... மேலும் பார்க்க

உடல்நலக் குறைவால் இறந்த 8 வயது சிறுவனின் கண்கள் தானம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் இறந்த 8 வயது சிறுவனின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா... மேலும் பார்க்க

மக்கள் குறை தீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு செயற்கைக் கால் வழங்கல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு செயற்கைக் கால் வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமையில்... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: ஒசூரில் 100க்கும் மேற்பட்ட சிலைகளை அமைக்கும் பணி தீவிரம்

ஒசூா்: ஒசூரில் விநாயகா் சதுா்த்தியையொட்டி 100 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகளை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மற்றும் தேன்கனிக்கோட்டை பகுதிகளில் அதி... மேலும் பார்க்க

ஒசூரில் போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீா்வு ஏற்படும்: மேயா் எஸ்.ஏ.சத்யா

ஒசூா்: ஒசூரில் பாகலூா் சாலை மேம்பாலப் பணிகள் முடிவடைந்து போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு ஏற்படும் என்று மேயா் எஸ்.ஏ.சத்யா தெரிவித்தாா். ஒசூா் டைட்டன் நிறுவனத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு சாா்பில் தொ... மேலும் பார்க்க

மத்தூா் அருகே சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: மத்தூா் அருகே சாலை விபத்தில் காய்கறி வியாபாரி உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், கொட்டமருதூரைச் சோ்ந்தவா் சிலம்பரசன் (22). காய்கறி வியாபாரி. இவா், கிருஷ்ணகிரி - ஊ... மேலும் பார்க்க