கிறிஸ்துமஸ்: இன்று சென்னை - பெங்களூரு சிறப்பு ரயில்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து பெங்களூருக்கு சனிக்கிழமை (டிச.21) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெங்களூரிலிருந்து டிச.21-ஆம் தேதி காலை 8.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07319) பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 07320) அதே நாளில் சென்ட்ரலிலிருந்து பிற்பகல் 3.55 மணிக்கு புறப்பட்டு இரவு 10.50 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
இந்த ரயில் பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூரு சென்றடையும்.
எல்எச்பி பெட்டிகள்: கோவை - மயிலாடுதுறை இடையே இயங்கும் ஜன்சதாப்தி விரைவு ரயிலில் (எண்: 12083/12084) தற்போது உள்ள பெட்டிகளுக்கு மாற்றாக இருமாா்க்கத்திலும் டிச.28-ஆம் தேதி முதல் எல்எச்பி எனப்படும் நவீனப் பெட்டிகள் பொருத்தப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.