IPL 2025 : 'புதிதாக வீரர்களை எடுக்க அனுமதி... ஆனால்!' - புதிய Temporary Replacem...
"கில் அல்ல, அந்த வீரர்தான் தகுதியானவர்" - இந்திய டெஸ்ட் கேப்டன் பதவிக்கு யாரைச் சொல்கிறார் அஸ்வின்
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) இங்கிலாந்துக்கெதிராக அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது.
இவ்வாறிருக்க, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாகச் செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா, மே 7-ம் தேதி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்ததால், யாருடைய கேப்டன்சியில் இங்கிலாந்தை இந்திய அணி எதிர்கொள்ளப்போகிறது என்பது புதிராகவே இருக்கிறது.

மேலும், விராட் கோலியும் நேற்று முன்தினம் (மே 12) டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துவிட்டதால், இவ்விருவரின் இடத்தையும் நிரப்பப்போவது யார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
இந்த நிலையில், இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பும்ரா தகுதியானவர் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், "இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் அணி முற்றிலும் புதிய அணியாக இருக்கும். அந்த அணியில் பும்ரா மூத்த வீரராக இருப்பார். கேப்டன் பதவிக்கான ஆப்ஷன்களில் அவரும் ஒருவரும். என்னைப் பொறுத்தவரை கேப்டன் பதவிக்கு பும்ரா தகுதியானவர். இருப்பினும், தேர்வுக் குழுவினர் அவரின் உடற்தகுதியைக் கொண்டு முடிவெடுப்பார்கள்" என்று கூறினார்.

மேலும், ரோஹித் மற்றும் கோலியின் ஓய்வு குறித்து பேசிய அஸ்வின், "ரோஹித், கோலி இருவரும் ஒன்றாக ஓய்வு பெறுவார்கள் என்று எந்த யோசனையும் இல்லை. இது இந்திய கிரிக்கெட்டுக்கு சோதனைகாலமாக இருக்கும். உண்மையில் இப்போதுதான் கௌதம் கம்பீர் சகாப்தத்தின் தொடக்கம்.

அவர்களின் ஓய்வு நிச்சயமாக ஒரு தலைமைத்துவ வெற்றிடத்தை உருவாக்கும். குறிப்பாக இதுபோன்ற சுற்றுப்பயணங்களில் அனுபவத்தை எங்கிருந்தும் வாங்க முடியாது. விராட்டின் எனர்ஜியும், ரோஹித்தின் அமைதியும் மிஸ்ஸாகும்" என்று தெரிவித்தார்.