செய்திகள் :

``கிளாம்பாக்கத்தில் 18 வயது பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை..." - அண்ணாமலை கண்டனம்

post image
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கிளம்பாக்கத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த பெண் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை சாதாரணமாகிவிட்டதாகவும் திமுக அரசை விமர்சித்திருக்கிறார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் அண்ணாமலை, ``கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்துக்கு வெளியே 18 வயது இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த ஒரு நல்ல மனிதரின் செயலால் அந்தப் பெண் மீட்கப்பட்டார்.

அண்ணாமலை

தமிழ்நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமையும் சாதாரணமாகிவிட்டது. போதைப்பொருள்கள் எளிதில் அணுகக்கூடியதாக மாறிவிட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில், 2022 - 2024க்கு இடையில், தமிழ்நாட்டில் NDPS (Narcotics drugs and Psychotropic Substances act 1985) வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,122 மட்டுமே. அதேசமயம், 2021-ல் மட்டும் NDPS வழக்குகளில் மொத்தமாக 9,632 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் கஞ்சா ஆகியவற்றின் விற்பனை அதிகரித்து வருகிறது. ஆனால், கைதுகளின் எண்ணிக்கை குறைவது எப்படி? போதைப்பொருள் வியாபாரிகளைச் சுதந்திரமாக நடமாடவிட தமிழ்நாடு அரசு வேண்டுமென்றே மெத்தனமாகிவிட்டதா? நம் சகோதரிகள் சாலையில் பாதுகாப்பாக நடமாட இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்கள்?" என்று திமுக அரசுக்கு கேள்வியெழுப்பியிருக்கிறார்.

`கொஞ்சநாள் ஊர்ல போய் இருன்னு தலைவர் சொல்லிட்டார்' - வைகோவின் உதவியாளரை விசாரித்த கியூ பிரான்ச்

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் இன்று காலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் இங்கு, வைகோவின் உதவியாளர் வீட்டுக்கு ... மேலும் பார்க்க

America: அமெரிக்க வெளியேற்றிய இந்தியர்கள்... அமிர்தசரஸில் தரையிறங்கிய சி17 விமானம்!

அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய இந்தியர்களை சி17 ராணுவ விமானம் மூலம் அமெரிக்க அரசு இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக குடியேறியுள்ள வெளிநாட்டவரை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "பக்தர்கள் மேல கை வச்சா நீங்க இருக்க மாட்டிங்க..." - அண்ணாமலை பரபரப்புப் பேட்டி

திருப்பரங்குன்றம் விவகாரத்தின் பரபரப்பு அடங்கி, இன்று முதல் பக்தர்கள் கோயில், தர்காவிற்குச் செல்ல அனுமதி வழங்கியுள்ளது காவல்துறை.இருப்பினும், சிறிது நாள்களுக்குச் சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்கு கட்சி, அமை... மேலும் பார்க்க

'அயோத்தியில் கலவரத்தை முடிச்சிட்டு, திருப்பரங்குன்றத்தில ஆரம்பிச்சுருக்காங்க'- செல்வப்பெருந்தகை

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.இது தொடர்பாகப் பேசிய அவர், “மத நல்லிணக்கத்தை கெடுப்பதற்காக ஒரு கும்பல்... மேலும் பார்க்க

Kumbh Mela: மகா கும்பமேளாவில் பிரதமர் மோடி... திரிவேனி சங்கமத்தில் புனித நீராடல்!

கும்ப மேளா நிகழ்வில் பிரதமர் மோடி!கும்ப மேளா நிகழ்வில் பிரதமர் மோடி!கும்ப மேளா நிகழ்வில் பிரதமர் மோடி!கும்ப மேளா நிகழ்வில் பிரதமர் மோடி!கும்ப மேளா நிகழ்வில் பிரதமர் மோடி!கும்ப மேளா நிகழ்வில் பிரதமர் ம... மேலும் பார்க்க

‘இந்து தேசியமும் காலிஸ்தானியமும்..!’ - லீக்கான சீக்ரெட் ரிப்போர்ட்; பிரிட்டன் அரசுக்கு அச்சுறுத்தலா?

‘இந்து தேசியமும் காலிஸ்தானியமும் இங்கிலாந்தின் புதிய அச்சுறுத்தல்’‘இந்து தேசியமும் காலிஸ்தானியமும் இங்கிலாந்தின் புதிய அச்சுறுத்தல்’ என்ற மையத் தகவலுடன், பொதுவெளியில் லீக் ஆன பிரிட்டன் உள்துறை அலுவலக ... மேலும் பார்க்க