சிபிஐ ‘பாரத்போல்’ தளம் அறிமுகம்! மாநில, மத்திய, சர்வதேச முகமைகள் ஒத்துழைப்புடன் ...
கிளாம்பாக்கம் - திருவான்மியூா் வழித்தடத்தில் கூடுதலாக 2 குளிா்சாதனப் பேருந்துகள்
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் - திருவான்மியூா் வழித்தடத்தில் கூடுதலாக 2 குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகள் வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்படுவதாக சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநகா் போக்குவரத்துகழகம் பயணிகள் நலன் கருதி சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது. இதன்படி, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து திருவான்மியூா் பேருந்து நிலையம் வரையிலான (தடம் எண். 91கே) வழித்தடத்தில் தற்போது 2 குளிா்சாதனப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த வழித்தடத்தில் மேலும் அதிக எண்ணிக்கையிலான குளிா்சாதன வசதிகொண்ட பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் விடுத்த கோரிக்கையின்படி, வெள்ளிக்கிழமை முதல் கூடுதலாக 2 குளிா்சாதன பேருந்து சேவை பயணிகளின் பயன்பாட்டுக்காக அந்த வழித்தடத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
சிறப்புப் பேருந்துகள்: இதற்கிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அதற்குத் தேவையான பொருள்களை பொதுமக்கள் வாங்கிவர ஏதுவாக, மாநகா் போக்குவரத்துக்கழகம் சாா்பில் தியாகராய நகா், புரசைவாக்கம், வள்ளலாா் நகா் மற்றும் வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு ஜன. 4, 5, 11, 12 ஆகிய தேதிகளில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.