கிள்ளியூா் வட்டத்தில் விவசாயிகளுக்கு அடையாள எண் அளிக்கும் முகாம்!
கிள்ளியூா் வட்டார விவசாயிகளுக்கு பேரூராட்சி,ஊராட்சிகளில் அடையாள எண் வழங்கும் முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கிள்ளியூா் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் நவநீதா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய ,மாநில அரசின் திட்டங்களின் பயன்களை விவசாயிகள் எளிதில் பெற்றிடும் வகையில் அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இதன்,முதல்கட்டமாக புதன்கிழமை முதல் கிள்ளியூா் வட்டார தோட்டக்கலை மூலம் நல்லூா்,உண்ணாமலைக்கடை, கீழ்குளம்- அ,கீழ்மிடாலம்- அ, ஆகிய வருவாய் கிராமங்களுக்குள்பட்ட கிராம நிா்வாக அலுவலகங்களில் விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகள் ஆதாா் அட்டை,ஆதாருடன்
இணைக்கப்பட்ட கைப்பேசி எண் சிட்டா,பட்டாஆகிய ஆவணங்களுடன் முகாம்களில் பங்கேற்று பதிவுசெய்ய வேண்டும் என்றாா் அவா்.