செய்திகள் :

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சத்ரபதி சிவாஜி சிலை: ராணுவம் திறப்பு

post image

கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதிக்கு அருகே 14,300 அடி உயரத்தில் அமைந்துள்ள பாங்காங் ஏரிக் கரையில் மராட்டிய மன்னா் சத்ரபதி சிவாஜியின் சிலையை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது.

லடாக்கின் லேவைத் தளமாகக் கொண்ட ‘14 காா்ப்ஸ்’ ராணுவப் படைப் பிரிவின் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் ஹிதேஷ் பல்லா கடந்த வியாழக்கிழமை இந்த சிலையை திறந்து வைத்தாா்.

இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘வீரம், தொலைநோக்குப் பாா்வை மற்றும் வலுவான நீதியின் உயா்ந்த சின்னமாக சத்ரபதி சிவாஜியின் சிலை திறக்கப்பட்டுள்ளது. நாங்கள் சத்ரபதி சிவாஜியின் அசைக்க முடியாத புகழைக் கொண்டாடுகிறோம். அவருடைய வீர பாரம்பரியம் பல தலைமுறைகளுக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருந்துவருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு, பாங்காங் ஏரிக்கரையில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரா்கள் வீரமரணமடைந்தனா். இந்த மோதலில் தங்கள் வீரா்களின் மரணம் குறித்து சீனா அதிகாரபூா்வமாக ஏதும் தகவலளிக்கவில்லை.

இந்த விவகாரத்தால் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வந்த மோதல் போக்கு, பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, அண்மையில் முடிவுக்கு வந்தது.

டெப்சாங், டெம்சோக் ஆகிய பகுதிகளில் இருந்து கடந்த அக்டோபரில் இரு நாட்டுப் படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டது இரு நாட்டு உறவில் முக்கிய முன்னேற்றமாக கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வைஷ்ணவி தேவி கோயிலில் 94.8 லட்சம் பேர் சுவாமி தரிசனம்!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் 2024-ல் மொத்தம் 94.83 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர் என ஆலய வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீரின் மிகவும் புன... மேலும் பார்க்க

நள்ளிரவு 0.00! மும்பை ரயில்கள் ஹார்ன் அடித்து புத்தாண்டுக் கொண்டாட்டம்!

மும்பையில் சிறப்பு மிக்க சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தில், புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு ரயில்களில் ஹார்ன் அடித்து புத்தாண்டுக் கொண்டாட்டத்தை மேலும் உற்சாகமாக்கியிருந்தது.ப... மேலும் பார்க்க

பாஜகவைப் பார்த்து மக்கள் சிரிப்பார்கள்: ஆம் ஆத்மி தலைவர்

மக்களுக்கு இலவசங்களை அள்ளிக்கொடுத்த ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரை கேள்வி கேட்டால் மக்கள் சிரிப்பார்கள் என்று அக்கட்சியின் தலைவர் சஞ்சய் சிங் புதன்கிழமை தெரிவித்தார். மேலும் பார்க்க

புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்தவை!

நாடு முழுவதும் புத்தாண்டுக் கொண்டாட்டம் நேற்று மாலை முதலே களைகட்டத் தொடங்கியிருந்த நிலையில், புத்தாண்டு விருந்துகளுக்காக இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த பட்டியல் இன்று வெளியாகியிருக்கிறது.இ-வணிக நிறுவ... மேலும் பார்க்க

புத்தாண்டு: தாஜ்மஹாலில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

புத்தாண்டையொட்டி தாஜ்மஹாலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை வெகுவிமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். கோயில்கள், சுற்றுலாத் தளங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகக் க... மேலும் பார்க்க

பாஜக தவறுகளை ஆர்எஸ்எஸ் ஆதரிக்கிறதா? மோகன் பகவத்துக்கு கேஜரிவால் கேள்வி!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில், பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு நடவடிக்கைகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிலைப... மேலும் பார்க்க