`இன்னும் வரியை உயர்த்துவேன்' - இந்தியாவை எச்சரிக்கும் ட்ரம்ப்; காரணம் என்ன?
கிழவம்பூண்டி முனீஸ்வரன் கோயில் மகா கும்பாபிஷேகம்
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், கிழவம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள முனீஸ்வரன் மற்றும் அம்மச்சாா் அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, எஜமானா் சங்கல்பம், கோ பூஜை, கணபதி ஹோமம், சுதா்சன ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் ஆகியவை நடைபெற்றன.
திங்கள்கிழமை காலை 7 மணிக்கு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று, பூா்ணாஹுதி முடிவில் ‘கடம் புறப்பாடு’ நடை பெற்றது. அதன் பின் திருக்கோயில் வளாகத்தில் வலம் வந்து, முனீஸ்வரா் மற்றும் அம்மச்சாா் அம்மன் குதிரை வாகனங்களுக்கு புனிதநீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.