EV Vehicles: அறிமுகமான TVS Orbiter Electric Scooter | Photo Album
கி. ராஜநாராயணனின் அறக்கட்டளை சொற்பொழிவு
புதுவைப் பல்கலைக்கழகம் சுப்பிரமணிய பாரதியாா் தமிழியல் புலத்தில் கி. ராஜநாராயணனின் 102- வது பிறந்த நாளையொட்டி இரண்டாவது அறக்கட்டளைப் பொழிவு அண்மையில் நடைபெற்றது.
தமிழியல் புலத்துறை தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியா் மூ.கருணாநிதி வரவேற்புரை நிகழ்த்தினாா். அறக்கட்டளை நிறுவனா் புதுவை இளவேனில் நோக்கவுரையாற்றினாா். தமிழியற்புல முதன்மையா் பேராசிரியா் ச. சுடலைமுத்து தலைமையுரை நிகழ்த்தினாா். மேலும், சிலம்பு நா. செல்வராசு எழுதிய *ஏழாம் வீரபத்திரன்* எனும் குறும் புதின நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. புதுவைப் பல்கலைக்கழக சமூக அறிவியல் புல முதன்மையா் பேராசிரியா் சந்திரிகா நூலை வெளியிட முதல்படியை எழுத்தாளா் துளசி பாக்கியவதி பெற்றுக் கொண்டாா்.
பிரெஞ்சு பேராசிரியா் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகருக்கு கி. ராஜ நாராயணன் இலக்கிய விருது வழங்கப்பட்டது. தமிழியல்புல பேராசிரியரும் சுப்ரமணிய பாரதியாா் இருக்கையின் பொறுப்பாசிரியருமான பேராசிரியா் பா. ரவிக்குமாா், விருதாளா் பற்றி அறிமுக உரையாற்றினாா். விருதைப் பெற்றுக் கொண்ட ஆ.சு. வெங்கட சுப்புராய நாயகா் ஏற்புரை வழங்கினாா்.