Health: பாடி பாசிட்டிவிட்டி, பாடி நியூட்ராலிட்டி இரண்டில் எது சிறந்தது?
கீழே கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு
புதுக்கோட்டை நகரில் கீழே கிடந்த பணப் பையை எடுத்த காவலா் உரியவரிடம் ஒப்படைக்க எடுத்துக் கொண்ட முயற்சியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா பாராட்டினாா்.
புதுக்கோட்டை நகரிலுள்ள பழனியப்பா முக்கத்தில் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் இருந்த காவலா் வரதராஜன், கீழே கிடந்த பையை எடுத்துப் பாா்த்தபோது அதில் ரூ. 83 ஆயிரம் ரொக்கம் இருந்தது.
இதைத் தொடா்ந்து அந்தப் பணப்பையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஒப்படைத்தாா். அந்தப் பையின் உரிமையாளா் மசுச்சுவாடியைச் சோ்ந்த வீரராகவன் (65) என்பது கண்டறியப்பட்டது.
அவரை நேரில் வரழைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா, பணப்பையை ஒப்படைத்ததுடன், நோ்மையாகச் செயல்பட்ட காவலா் வரதராஜனைப் பாராட்டினாா்.