திருப்பதி கோயிலுக்கு ரூ.140 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்கம் வழங்கிய பக்தர்!
கீழே விழுந்தால் சேதமாகாது, அதிக பேட்டரி: அறிமுகமாகிறது ரெட்மி நோட் 15 பிளஸ்!
Redmi Note 15 Pro+ Display, Battery Specifications Confirmed Days Ahead of Launch in Chinaரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் இந்த வாரம் அறிமுகமாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் வெளியாவதையொட்டி, அதன் சிறப்புகள் குறித்து ரெட்மி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, 7,000mAh பேட்டரி திறன் மற்றும் 2 மீட்டர் உயரத்திலிருந்து தவறினாலும் சேதமாகாத வகையில் உரையிடப்பட்டுள்ளதகவும் ரெட்மி நிறுவனம் கூறுகிறது.
இதோடுமட்டுமின்றி, நீர்ப்புகாதன்மை தரச் சான்றிதழுக்கான ஐந்து நட்சத்திர அங்கீகாரத்தைப் பெற்ற முதல் ஸ்மார்ட்போனாகவும் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் உள்ளது.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன், 6.83 அங்குல திரை கொண்டது.
திரை பிரகாசத்திற்காக குறைந்தபட்சமாக் 1,800 nits திறனும் அதிகபட்சமாக 3,200 nits திறனும் கொண்டுள்ளது.
திரைக்கு டிராகன் கிரிஸ்டல் கிளாஸ் கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புற அமைப்பு ஃபைபர்கிளாஸ் கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.
7,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. வயர் இல்லாமல் 90W சார்ஜ் ஆகும் திறனும், 22.5W ரிவர்ஸ் சார்ஜ் திறனும் உடையது.
ஸ்மார்ட்போனின் உறுதித்தன்மைக்காக, 2 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தாலும் சேதமாகாததை உறுதிப்படுத்தும் வகையில், 50 முறை சோதனை செய்யப்பட்டுள்ளது.
அதிக வெப்பத்தை தாங்குவதற்காக IP66, தூசி படியாமல் இருக்க IP68, நீர்ப்புகாத்தன்மைக்காக IP69 திறன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஸ்நாப்டிராகன் 7எஸ் மூன்றாம் தலைமுறை புராசஸர் கொண்டது. ஆன்ட்ராய்டு 15 இயங்குதளம் உடையது.
பின்புறம் 50MP- யில் மூன்று முதன்மை கேமராக்கள் உள்ளன.
ஆக. 21ஆம் தேதி இரவு 7 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4.30) ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் விற்பனைக்கு கிடைக்கும்
இதையும் படிக்க | ஒரு முறை சார்ஜ் செய்தால் 46 மணிநேரம் பேசலாம்! ஹானர் எக்ஸ் 7 சி அறிமுகம்!