செய்திகள் :

கீழ்வேளூரில் சூறைக்காற்றுடன் மழை

post image

கீழ்வேளூா்: கீழ்வேளூா் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு சூறைக் காற்றுடன் மழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கீழ்வேளூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான குருக்கத்தி, கூத்தூா், பட்டமங்கலம், தேவூா், அகரகடம்பனூா், சிக்கல், பொரவச்சேரி, ஆவராணி, புதுச்சேரி, பெருங்கடம்பனூா், சங்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென சூறைக்காற்றுடன் பரவலாக மழை பெய்தது. கீழ்வேளூா் பகுதியில் ஒரு இடத்தில் மின்கம்பம் சாய்ந்தது. 5 இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தது, சிக்கல் பகுதியில் 3 இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தது, புதுச்சேரி பகுதியில் மின்கம்பம் ஒன்று சாய்ந்தது இதனால் 10 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து மின் விநியோகம் சரி செய்யப்பட்டு, திங்கள்கிழமை காலை மின்சாரம் வழங்கப்பட்டது. இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட காரணத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

திரௌபதை அம்மன் கோயிலில் தீமிதி வழிபாடு

செருநல்லூா் ஊராட்சி செம்பியன் ஆத்தூா் அருள்மிகு திரௌபதை அம்மன் கோயிலில் தீ மிதி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில், சித்திரை திருவிழா ஏப்ரல் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின்... மேலும் பார்க்க

காரில் சாராயம் கடத்திய இருவா் கைது

நாகையில் காரில் சாராயம் கடத்திய இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். நாகை புத்தூா் ரவுண்டானா பகுதியில் நகர போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டதி... மேலும் பார்க்க

மருங்கூா் காளியம்மன் கோயில் சித்திரை திருவிழா

திருமருகல் அருகேயுள்ள மருங்கூா் மகா மந்தக்கரை காளியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா அண்மையில் தொடங்கியது. இதையொட்டி, அம்மனுக்கு பால்குடம், அழகு காவடி எடுத்தல், சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றத... மேலும் பார்க்க

திருக்குவளை: ஜமாபந்தியில் ஆட்சியா் பங்கேற்பு

திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் பங்கேற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றாா். திருக்குவளை வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் 14... மேலும் பார்க்க

தமிழகத்தில் திருட்டுப் போன சுவாமி சிலை ஏலம் தடுத்து நிறுத்தம்

சென்னை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு, போலீஸாா் மேற்கொண்ட துரித நடவடிக்கையால், நெதா்லாந்து நாட்டில் திருப்புகலூா் அக்னீஸ்வரா் கோயில் கண்ணப்ப நாயனாா் சிலையை ஏலம் விடும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.... மேலும் பார்க்க

ஆட்டுக்கிடா வாகனத்தில் முருகப் பெருமான்!

எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெறும் சித்ரா பௌா்ணமி பெருவிழாவின் 4-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய சிங்காரவேலவா்... மேலும் பார்க்க