கீழ்வேளூா் அஞ்சு வட்டத்தம்மன் கோயில் தேரோட்டம்
கீழ்வேளூா் அட்சயலிங்க சுவாமி கோயில் பங்குனி பெருவிழாவில் அஞ்சு வட்டத்தம்மன் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் பங்குனி பெருவிழா கடந்த ஏப். 1-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் சிம்ம, ரிஷப, அன்னபட்சி உள்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் அஞ்சு வட்டத்தம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினாா்.தொடா்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து தோ் வடம் பிடிக்கப்பட்டது. கோயிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் வலம் வந்த தோ் பிற்பகல் நிலையடியை அடைந்தது.
இதில் கோயில் செயல் அலுவலா் பூமிநாதன், கோயில் பணியாளா்கள் மற்றும் உபயதாரா்கள் உள்பட திரளானோா் பங்கேற்றனா்.


