செய்திகள் :

குஜராத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் 15,000 புகார்கள்!

post image

குஜராத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான கொடுஞ்செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் இது தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளில் 15,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் பட்டியலின பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, தேசிய உதவிஎண் (என்.எச்.ஏ.ஏ.) 14566-ஐ தொடர்புகொண்டு 15,303 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், 2022-இல் 3,755 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஓராண்டில் 2023-இல் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி 7,432 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சுர்ஜீவாலா, குற்றச்செயல்களுக்கு எதிரான தேசிய உதவிஎண் (என்.எச்.ஏ.ஏ.) வழியாக மாநில வரியாக எத்தனை புகார்கள் பெறப்பட்டுள்ளன என்பதைக் குறித்து கேள்வியெழுப்பினார். இதற்கு மத்திய அரசு தரப்பிலிருந்து அளிக்கப்பட்டுள்ள பதிலில், குஜராத்தை பொருத்தவரையில்,

2020-இல் ---> 191

2021-இல் ---> 705

2022-இல் ---> 3,755

2023-இல் ---> 7,432 (கணிசமாக அதிகரிப்பு)

2024-இல் ---> 2,144 (அதன்பின் சரிவு)

2025-இல் ---> 1,076 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் தொடர்ந்து ஆளுங்கட்சியாக கோலோச்சி வரும் பாஜக அரசுக்கு களங்கத்தை விளைவிப்பதாக மேற்கண்ட தரவுகள் அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது.

Gujarat’s caste-crime surge: 15,303 complaints from Scheduled Caste and Scheduled Tribe members over the past five years.

அமெரிக்காவுக்கு அதிக ஸ்மார்ட்போன்களை அனுப்பும் நாடு இந்தியா!

அமெரிக்காவுக்கு அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து அனுப்பும் நாடாக இந்தியா உள்ளதாக மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் மெ... மேலும் பார்க்க

தெருநாய்களால் சோகம்! தேசியளவிலான தடகள வீரர் பலி!

ஒடிஸாவில் தெருநாய் கடித்து தேசியளவிலான மாற்றுத்திறனாளி தடகள வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒடிஸாவில் கடந்த ஜூலை 23 ஆம் தேதியில், போலங்கிர் பகுதியில் பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளி... மேலும் பார்க்க

ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை(ஆக. 10) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.கர்நாடகத்தில் ஒரு பெண் வாக்காளர் இரண்டு முறை வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில், ... மேலும் பார்க்க

உபி.: கிணற்றுக்குள் இறங்கியபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 சகோதரர்கள் பலி

உத்தரப் பிரதேசத்தில் கிணற்றுக்குள் இறங்கியபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 சகோதரர்கள் பலியாகினர். உத்தரப் பிரதேச மாநிலம், சர்காதல் கிராமத்தில் உள்ள சுமார் 20 அடி ஆழ கிணற்றில் பம்ப் பெல்ட்டை சரிசெய்ய மூ... மேலும் பார்க்க

இரு வெவ்வேறு வாக்காளர் அட்டைகளுடன் பிகார் துணை முதல்வர்! தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பிகார் துணை முதல்வர் விஜய்குமார் சின்ஹா, இருவேறு வாக்காளர் அட்டைகள் வைத்திருப்பதாக ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், விஜய்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு... மேலும் பார்க்க

உத்தரகண்ட் இயற்கை பேரிடர்: 10 ஆண்டுகளில் 3,500 பேர் பலி

உத்தரகண்டில் அடிக்கடி நிகழும் இயற்கை பேரிடர்களில் சிக்கி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 3,500 பேர் பலியாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உத்தரகண்டில் நிகழும் காலநிலை மாற்றம், பெருவெள்ளம், நிலச... மேலும் பார்க்க