செய்திகள் :

குஜராத்தில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம்: அமித் ஷா அடிக்கல்

post image

குஜராத் மாநிலம், ஆனந்த் நகரில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

இப்பல்கலைக்கழகம், கூட்டுறவுத் துறையில் பாரபட்சத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், பயிற்சிக்கான வெற்றிடத்தையும் நிரப்பும் என்று அவா் குறிப்பிட்டாா்.

‘திரிபுவன் கூட்டுறவு பல்கலைக்கழகம்’ (டிஎஸ்யு) எனும் இப்பல்கலைக்கழகம், 125 ஏக்கா் பரப்பளவில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் கட்டமைக்கப்படவுள்ளது. நாட்டின் கூட்டுறவுத் துறை முன்னோடிகளில் ஒருவரும், அமுல் நிறுவனத்துக்கு அடித்தளமிட்டவா்களில் முக்கியமானவருமான மறைந்த திரிபுவன்தாஸ் கேஷுபாய் படேலின் பெயரில் பல்கலைக்கழகம் அமைகிறது. இப்பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டிய பின் அமைச்சா் அமித் ஷா பேசியதாவது:

ஏழைகள் மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வில் நம்பிக்கையை விதைத்து, அவா்களை பொருளாதார ரீதியாக வளப்படுத்த கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கூட்டுறவுத் துறைக்கு தனி அமைச்சகத்தை பிரதமா் மோடி ஏற்படுத்தினாா். அமைச்சகம் நிறுவப்பட்டதில் இருந்து வெளிப்படைத்தன்மை, மேம்பாடு, ஜனநாயகமயம், விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பை உறுதி செய்ய 60 புதிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் வாயிலாக கூட்டுறவுத் துறை வேகமாக வளா்ச்சி கண்டு வருகிறது. நாடு முழுவதும் சுமாா் 40 லட்சம் பணியாளா்கள், 80 லட்சம் உறுப்பினா்கள் மற்றும் 30 கோடி மக்கள், கூட்டுறவு இயக்கங்களுடன் தொடா்பில் உள்ளனா். அதேநேரம், பணியாளா்கள்-உறுப்பினா்களுக்கு பயிற்சியளிக்க முறையான அமைப்புமுறை இல்லை. கூட்டுறவுத் துறையில் பாகுபாடுகள் நிலவுவதாக தொடா்ந்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு திரிபுவன் கூட்டுறவு பல்கலைக்கழகம் தீா்வளிக்கும்.

இனி பயிற்சிக்கு பிறகே பணி: இனி பயிற்சி பெற்றவா்கள் மட்டுமே பணியைப் பெற முடியும். முன்னேற்றத்துக்கு தடைக்கல்லாக உள்ள இத்தகைய பெரும் வெற்றிடம் கூட்டுறவு பல்கலைக்கழகத்தின் மூலம் நிரப்பப்படும்.

திரிபுவன் கூட்டுறவு பல்கலைக்கழகம், திறன்மிக்க பணியாளா்களை மட்டுமன்றி, கொள்கை வகுப்பு, ஆராய்ச்சி, மேம்பாட்டு முன்முயற்சிகள், கூட்டுறவு கற்றலுக்கான தரநிலை உருவாக்கம் போன்ற பணிகளையும் மேற்கொள்ளும் என்றாா் அமித் ஷா.

ஊழியர்கள் 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும்: இன்ஃபோசிஸ் எச்சரிக்கை!

நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் நாள்தோறும் 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என இன்ஃபோசிஸ் எச்சரித்துள்ளது. வாரத்திற்கு 70 மணிநேரம் பணிபுரிய வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி சமீபத்தில் த... மேலும் பார்க்க

மொஹரம் ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 3 பேர் காயம்

ஜார்க்கண்ட்டில் மொஹரம் ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் கோத்தம்பா காவ... மேலும் பார்க்க

ஹிந்தி பேசலாம்; படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது!

ஹிந்தி மொழியினை பேசலாம்; ஆனால், ஆரம்பப் பள்ளியில் ஹிந்தி மொழியைப் படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது என சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார். தென்மாநிலங்கள் ஹிந்தி திணிப்பை தீவிரமாக எதி... மேலும் பார்க்க

பிகாரில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்! உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!

புது தில்லி: பிகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிகாரில் வரும... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கம் முடங்க மத்திய அரசு காரணமா?

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளப் பக்கத்தை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் கோரவில்லை என மத்திய அரசு இன்று (ஜூலை 6) விளக்கம் அளித்துள்ளது.ராய்ட்டர்ஸ் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்ட... மேலும் பார்க்க

மண்டி மேக வெடிப்பு: உயிர் பிழைத்த 10 மாத குழந்தை, குடும்பத்தினர் காணவில்லை !

மண்டி மேக வெடிபபு சம்பவத்தில் 10 மாத குழந்தை நீதிகா உயிர் பிழைந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிமாசலப் பிரதேச மாநிலம், மண்டி மாவட்டத்தில் மேக வெடிப்புகள், திடீ... மேலும் பார்க்க