செய்திகள் :

குஜராத்தில் பெண் போலீஸ் மீது அமிலம் வீசிய ஆட்டோ ஓட்டுநர்!

post image

குஜராத்தில் பெண் போலீஸ் மீது அமிலம் வீசிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத்தின் கலோல் வட்டத்தில் உள்ள சத்ரல் கிராமத்தில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தார். அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவால் பெண் போலீஸுக்கும் ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் அதிகரிக்கும் முன், சக போலீஸார் தலையிட்டு அந்த ஓட்டுநரை உள்ளூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆலோசனைக்குப் பிறகு, அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவரது கோபம் அத்துடன் முடிவடையவில்லை. வீட்டிற்குச் சென்ற ஆட்டோ ஓட்நர், கழிப்பறைகளை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் அமில பாட்டிலை எடுத்து வந்து அந்த பெண் போலீஸ் மீது வீசினார்.

தென் கொரியாவில் கனமழையால் வெள்ளம்! 4 பேர் பலி.. 5,600 பேர் வெளியேற்றம்!

இதில் பெண்ணின் கை, தோள்பட்டை மற்றும் கழுத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டன. உடனே அவர் காந்திநகர் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய ஆட்டோ ஓட்டுநர் பிறகு கைது செய்யப்பட்டார். அசோக் என்ற நபர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

பெண் போலீஸ் மீதான இந்த தாக்குதல் சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

In a chilling act of revenge, a rickshaw driver attacked a female home guard jawan with acid during traffic duty in Chhatral village of Kalol taluka of Gujarat on the morning of July 18.

சத்தீஸ்கரில் 6 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். நாராயண்பூா் மாவட்டத்தின் அபுஜ்மத் வனப் பகுதியில் நக்ஸ... மேலும் பார்க்க

மேம்படுத்தப்பட்ட ‘நிஸ்தாா்’ மீட்புக் கப்பல் கடற்படையில் இணைப்பு

முழுவதும் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் நிஸ்தாா் மீட்புக் கப்பல் இந்திய கடற்படையில் வெள்ளிக்கிழமை இணைக்கப்பட்டது. ஆழ்கடல்களில் மூழ்கும் நீா்மூழ்கிக் கப்பல்களை அடையாளம் காணவும், மீட்புப் பணிகளை ... மேலும் பார்க்க

மரண தண்டனையில் இருந்து நிமிஷாவைக் காக்க தொடா் முயற்சிகள்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

யேமன் நாட்டில் மரண தண்டனையில் இருந்து இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவைக் காப்பதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் தொடா்ந்து மேற்கொண்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தத... மேலும் பார்க்க

370-ஆவது பிரிவு ரத்துக்குப் பின் முளைத்த ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ - பஹல்காம் உள்பட 5 பெரிய தாக்குதல்கள்

அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு (ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து) ரத்துக்கு பிறகு லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழலாக ஜம்மு-காஷ்மீரில் உருவெடுத்ததே ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ (டிஆா்எஃப்).... மேலும் பார்க்க

குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளின் விடுதலை: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளின் விடுதலை குறித்து அனைத்து மாநிலங்களும் பொதுவான சிறை விதிமுறைகளை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. உச்சநீதிமன்... மேலும் பார்க்க

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர சீா்திருத்தம்: காலநிா்ணயத்துடன் மேற்கொள்ள இந்தியா வலியுறுத்தல்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை காலநிா்ணயம் செய்து அவசரமாக சீா்திருத்தம் செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இதுதொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியாவுக்கான நிரந்தர ... மேலும் பார்க்க