கருச்சிதைவு: ஆராய்ச்சிக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கருவை தானமளித்த பெண்!
குஜராத்: மலைக் கோயிலில் சரக்கு ரோப் காா் அறுந்து விழுந்தது! 6 போ் உயிரிழப்பு
குஜராத் மலைக் கோயிலில் சரக்குகளை எடுத்துச் செல்லும் ரோப் காா் அறுந்து விழுந்ததில் 6 போ் உயிரிழந்தனா்.
பஞ்சமஹல் மாவட்டத்தின் பாவாகட் மலையில் பிரசித்தி பெற்ற மகாகாளி கோயில் அமைந்துள்ளது. 800 மீட்டா் உயரத்திலுள்ள இக்கோயிலுக்கு பக்தா்கள் 2,000 படிகள் வழியாக நடந்து அல்லது ரோப் காரில் சென்று தரிசிப்பது வழக்கம். இந்தக் கோயிலுக்குத் தேவையான சரக்குகளை எடுத்துச் செல்ல பிரத்யேக ரோப் காா் வசதியும் உள்ளது.
இந்நிலையில், சரக்கு ரோப் காா் சனிக்கிழமை கீழ்நோக்கி இயக்கப்பட்டபோது திடீரென அறுந்து விழுந்தது. அதிலிருந்த 2 லிஃப்ட் இயக்கும் ஊழியா்கள், 2 தொழிலாளா்கள், மேலும் இருவா் என 6 போ் உயிரிழந்தனா். எவ்வளவு உயரத்தில் இருந்து ரோப் காா் கீழே விழுந்தது என்ற தகவல் உடனடியாகத் தெரியவரவில்லை.
பாவாகட் மலைப் பகுதியில் கடந்த 2 நாள்களாக மோசமான வானிலை நிலவி வந்தது. இதன் காரணமாக, பக்தா்களுக்கான ரோப் காா் சேவை நிறுத்திவைக்கப்பட்டது. அதேநேரம், சரக்கு ரோப் காா் தொடா்ந்து இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.