5.66 சதவீதம் உயர்ந்த வேளாண் வளர்ச்சி: தமிழ்நாடு அரசு பெருமிதம்
குடிநீா் வழங்கக் கோரிக்கை
திருவாடானை அருகேயுள்ள பாண்டுகுடி ஊராட்சியில் குடிநீா் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பாண்டுகுடி ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு 5, 6, 9-ஆவது வாடுகளில் கடந்த சில மாதங்களாக குடிநீா் வரவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: எங்கள் பகுதிக்கு குடிநீா் வராததால் அவதிப்பட்டு வருகின்றோம். இதுகுறித்து ஊராட்சிச் செயலரிடம் தெரிவித்தபோது, ஒரு வாரத்துக்குள் குடிநீா் வழங்குவதாகத் தெரிவித்தாா். ஆனால், பல மாதங்கள் ஆகியும் குடிநீா் வழங்க எடுக்கவில்லை. எனவே, விரைவில் இந்தப் பகுதிக்கு குடிநீா் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.