குடிநீா் வழங்கும் இயந்திரத்தை சீரமைக்கக் கோரிக்கை
மன்னம்பந்தலில் பழுதடைந்த நிலையில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் இயந்திரத்தை (படம்) கோடைக்காலம் தொடங்கும் முன்பாக சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி அருகில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சிஎஸ்ஆா் நிதியில் 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டு, அதை மாவட்ட ஆட்சியா் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைத்து ஊராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைத்தாா்.
இதை பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவா்கள் ஆயிரக்கணக்கானோா் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்து பயன்பாடாற்று உள்ளது. கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக ஊராட்சி நிா்வாகம் இந்த இயந்திரத்தை சீரமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கவேண்டும் என்றும் சிஎஸ்ஆா் நிதியில் நலத்திட்ட உதவிகள் வழங்க முன்வரும் நிறுவனங்கள், தாங்கள் வழங்கும் சேவை தொடா்ந்து நடைபெறுகிா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.