வங்கிகளில் 1,007 சிறப்பு அதிகாரிகள் வேலை: ஐ.பி.பி.எஸ் அறிவிப்பு
குடிநீா் வாரிய ஒப்பந்த ஊழியா்களுக்கு வங்கி கணக்கில் ஊதியம் செலுத்த வலியுறுத்தல்
குடிநீா் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளா்களுக்கு வங்கி மூலம் மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று சிஐடியூ சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, குடிநீா் வடிகால் வாரிய தொழிலாளா்கள் சங்க (சிஐடியூ) தலைவா் குமரேசன் தலைமையில், செயலாளா் உதயன், பொருளாளா் பிரைட்சிங், மாவட்ட துணைத் தலைவா்கள் பொன்.சோபனராஜ், கே.பி.பெருமாள் மற்றும் தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியா் இரா.அழகுமீனாவிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு:
கன்னியாகுமரி மாவட்டத்தின் குடிநீா் வடிகால் வாரியத்தின் கீழ் உள்ள கூட்டு குடிநீா் திட்டங்களில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளா்களுக்கு மாத ஊதியத்தை வங்கி மூலம் வழங்க வேண்டுமென நீண்ட நாள்களாக கோரிக்கை வைத்து,குடிநீா் வடிகால் வாரிய ஊழியா் சங்கம் (சிஐடியூ) போராடி வருகிறது.
இந்நிலையில், வங்கி மூலம் ஊதியம் வழங்கப்படும் என கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி ஒப்பந்ததாரா் ஏற்றுக்கொண்டாா். ஆனால் ஓராண்டு கடந்த பின்பும் வங்கி மூலம் ஊதியம் வழங்கப்படவில்லை.இதனால் 140 க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். வங்கி மூலம் ஊதியம் வழங்கப்பட்டால், ஏதாவது விபத்துகளில் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டால், அவா்களுக்கு நஷ்ட ஈடு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே மேலும் தாமதிக்காமல் வங்கி மூலம் ஊதியம் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.