செய்திகள் :

குடியரசுத்தலைவருடன் முப்படைத் தளபதிகள் சந்திப்பு!

post image

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முப்படைத் தலைமைத் தளபதி மற்றும் முப்படைகளின் தளபதிகள் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர்.

முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சௌஹான், ராணுவப் படைத் தலைவர் உபேந்திர திவேதி, விமானப் படைத் தலைவர் ஏ.பி. சிங், கடற்படைத் தலைவர் தினேஷ் கே. திரிபாதி ஆகியோர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ஆபரேஷன் சிந்தூர் பற்றியும் இந்தியா - பாகிஸ்தான் தற்போதைய நிலை பற்றியும் விளக்கமளித்து வருகின்றனர்.

அப்போது பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்த இந்திய பாதுகாப்புப் படைகளின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் குடியரசுத்தலைவர் பாராட்டியதாக குடியரசுத்தலைவர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தம்

கடந்த ஏப். 22 பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை கடந்த மே 7 அன்று இந்தியா மேற்கொண்டது. எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் ராணுவ நிலைகள், விமான தளங்களை இந்தியா தாக்கி அழித்தது. ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது.

இதனிடையே, இரு நாடுகளிடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் முன்வந்தது. அதன்படி போர் நிறுத்தப்படுவதாக சனிக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பிரதமர் மோடியும் மக்களிடம் உரையாற்றினார்.

எல்லையில் அமைதியான சூழ்நிலை திரும்பி வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும் எல்லையில் கண்காணிப்புப் பணி தொடர்ந்து வருகிறது.

இதையும் படிக்க | மே 16-ல் 10, 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கான பாதுகாப்பு அதிகரிப்பு!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டு வரும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பானது மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களினால் ... மேலும் பார்க்க

2 வது முறையாக அதிபர் டிரம்ப்-ஐ சந்திக்க கத்தார் பறந்தார் முகேஷ் அம்பானி!

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து 2வது முறையாக அவரைச் சந்திக்க முகேஷ் அம்பானி கத்தார் நாட்டுக்குச் சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அரசு முறைப் பயணமாக கத்தார் ந... மேலும் பார்க்க

பஞ்சாப் கள்ளச்சாராய விவகாரம்: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. அமிர்தசரஸின் மஜிதா பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிக்க மெத்தனால் எனும் வேதியல் பொருளைப் பய... மேலும் பார்க்க

இந்திய பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி ரூ.23,622 கோடியாக உயர்வு!

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ், இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி, இந்த 2024 - 25ஆம் நிதியாண்டில் ரூ.23,622 கோடியாக அதிகரித்துள்ளது.இதுவே கடந்த ஆண்டு ரூ.21,083 கோடியாக இருந்ததும், தற்ப... மேலும் பார்க்க

"சிந்தூர்" வெற்றி: பிரதமருக்குப் பாராட்டுத் தெரிவித்த முதல்வர் தாமி!

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை வெற்றிகரமாக்கிய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி பாராட்டுத் தெரிவித்தார்.டேராடூனில் திரங்கா சம்மன் யாத்திரையைக் கொடியசைத்துத் தொடங்கி... மேலும் பார்க்க

ஷெல் தாக்குதலுக்குள்ளான மக்களுடன் உமர் அப்துல்லா கலந்துரையாடல்!

பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பார்வையிட்டு, அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ... மேலும் பார்க்க