உளவுத்துறையில் வேலை வேண்டுமா?: டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: வாக்களிக்காத 13 பேர் யார்?
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் 13 பேர் வாக்களிக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
காலை 10 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், தற்போது வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மாலை 5 மணி வரை 769 உறுப்பினர்கள் வாக்களித்ததாகத் தெரிகிறது. மொத்தமாக 782 வாக்குகள் பதிவாக வேண்டிய நிலையில், 13 வாக்குகள் மட்டுமே செலுத்தப்படாமல் உள்ளது.
543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் ஒரு உறுப்பினர் இடம் காலியாக உள்ளது. 233 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் 5 எம்.பி.க்கள் இடம் காலியாக உள்ளது. வெற்றி பெறுவதற்கு குறைந்தபட்சம் 392 வாக்குகள் தேவை.
பிஜு ஜனதா தளம் மற்றும் பாரத ராஷ்டிர சமிதி கட்சிகளின் எம்.பி.க்கள் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணித்திருந்தனர். இதனால், 769 உறுப்பினர்கள் வரை வாக்களித்துள்ளதாகத் தெரிகிறது.
வாக்களிக்காத உறுப்பினர்கள் யார்?
பிஜு ஜனதா தளத்தின் சஸ்மித் பத்ரா, முன்னா கான், நிரஞ்சன் பிஷ்யா, மனஸ் ரஞ்சன் மங்கராஜ், சுலதா தியோ, தேபாஷிஷ் சமந்த்ரே மற்றும் சுபாஷிஷ் குந்தியா ஆகியோர் வாக்களிக்கவில்லை. பாரத ராஷ்டிர சமிதி கட்சியில் கே.ஆர். சுரேஷ் ரெட்டி, ரவி சந்திரா வத்திராஜூ, தாமோதர் ராவ், பி. பார்த்தசாரதி ரெட்டி ஆகியோர் வாக்களிக்கவில்லை.
சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் ஹர்சிம்ரத் கெளர் மற்றும் சுயேட்சை எம்.பி. சரம்ஜீத் சிங் வாக்களிப்பதில் இருந்து விலகியுள்ளனர்.
இதையும் படிக்க | மல்லிகை மட்டுமல்ல, ரசகுல்லா முதல் தேயிலை வரை! ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்டவை!