குடும்பத்திற்கு கொலை மிரட்டல்கள்: மன்னிப்பு கேட்ட அனுராக் காஷ்யப்!
புலே திரைப்படத்திற்கு ஆதரவாக பேசிய தனக்கும் தனது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.
சமூக சீர்திருத்தவாதி ஜோதிராவ், சாவித்ரிபாய் புலேவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து புலே திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் மத்திய தணிக்கைக் குழு வாரியம் சில காட்சிகளை மாற்றும்படி வலியுறுத்தியதாலும் பிராமணர் சமூகத்தினர் சிலர் இந்தப் படம் எங்கள் சமூகத்தை தவறாக சித்தரிப்பதாகக் கூறியும் பேசினார்கள். அதற்கு எதிராக அனுராக் காஷ்யப் பேசினார்.
அதில், “பிராமணர்கள் புலே படத்தை ஏன் எதிர்க்கிறார்கள்.? ஜாதியை ஒழித்துவிட்டதாகச் சொல்கிறீர்களே, சாதிகளே இல்லையென்றால் நீங்கள் எப்படி பிராமணர்கள் ஆவிர்கள்? நீங்கள் யார்? ஏன் படத்தை எதிர்க்கிறீர்கள்? சாதிகளே இல்லையெனில் ஏன் சாவித்ரிபாய், ஜோதிராவ் புலே போராடினார்கள்?” என காட்டமாக பேசியது சர்ச்சையானது.
தவறாகப் பேசிய அனுராக் காஷ்யப், தொடரும் சர்ச்சைகள்
இதனைத் தொடர்ந்து அனுராக் காஷ்யப் பதிவிட்ட இன்ஸ்டா பதிவில் ஒருவரின் கருத்துக்கு பதிலளிக்கும்போது,“பிராமணர்கள் மீது மூத்திரம் அடிப்பேன். எதாவது பிரச்னையா?”எனக் கேட்பார்.
இதற்காக அனுராக் காஷ்யப் குடும்பத்தினர் மீது கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
இதனையடுத்து அனுராக் காஷ்யப் அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார். ஆனால், தனது பதிவுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும் தவறாக பேசிய அந்த ஒற்றை வரிக்கு மட்டும் மன்னிப்பு கேட்கிறேன் எனவும்
கூறியுள்ளார்.
A Brahmin urinated on the face of a tribal man in MP in reality.
— Vaani ✨ (@depressedsoul_0) April 19, 2025
while, Anurag Kashyap only said to do it in the future, which is purely fictional.
Guess which act gets more coverage & outrage?
Tells you a lot about the state of affairs in India and the deep-rooted casteism.!! pic.twitter.com/uIvOIUnYzN
மன்னிப்பு கேட்கிறேன், ஆனால்...
இது குறித்து இன்ஸ்டா பக்கத்தில் அனுராக் காஷ்யப் கூறியதாவது:
இது எனது மன்னிப்பு. ஆனால், இது எனது பதிவுக்காக அல்ல. முக்கியமானவற்றை விட்டுவிட்டு ஒரு வரியை எடுத்துக்கொண்டு வெறுப்பைப் பரப்புகிறார்கள்.
நான் பேசியதிலிருந்து பின் வாங்க மாட்டேன். என்னை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டுங்கள். எனது குடும்பம் எதுவுமே சொல்லவில்லை. உங்களுக்கு மன்னிப்பு வேண்டுமானால் இதோ இங்கிருக்கிறது.
இந்துக்களில் முக்கியமானவர்களிடமிருந்து எனது மகள், குடும்பம், நண்பர்கள், உடன் வேலை செய்தவர்களுக்கு கொலை மிரட்டல், வன்கொடுமை போன்ற மிரட்டல்கள் வருவது சரியில்லை.
நீங்கள் எழுதுவதற்கு முன்பாக அது என்ன நோக்கத்தில் கூறப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.
Anurag Kashyap,mann what a spine!! Can you lend some to akshay kumar, shahrukh khan, and youngsters calling them actors and directors in bollywood. pic.twitter.com/KKFktgS4Ix
— Subhajit Naskar (@subhajit_n) April 18, 2025