சென்னை கடற்கரைகளில் இறந்து ஒதுங்கும் ஆலிவ் ரிட்லி ஆமைகள்: மீன்பிடி வலைகள் காரணம...
குடும்பஸ்தன் டிரைலர்!
நடிகர் மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
சினிமாகாரன் நிறுவனத் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் குடும்பஸ்தன் என்ற படத்தில் நடிகர் மணிகண்டன் நடித்து முடித்துள்ளார்.
சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இந்தப் படத்துக்கு வைஷாக் இசையமைத்துள்ளார்.
இப்படம் ஜன. 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: விளம்பரம் தேவைப்படாத சூப்பர் ஸ்டார் அஜித் குமார்!!
இந்த நிலையில், படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். குடும்பஸ்தனாக மாறும் ஆண் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சிக்கல்களைப் பேசும் படமாக இது உருவாகியிருக்கிறது.