செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி
குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் இன்று சிறப்பு முகாம்
திருவள்ளூா் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பான பணிகள் மேற்கொள்வதற்கான (ஜூலை 12) சனிக்கிழமை சிறப்பு முகாம், 9 வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறும் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை ஒவ்வொரு வட்டம் தோறும் பொதுவிநியோக திட்ட குறைதீா் முகாம் நடத்த என உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பான-ஜூலை 2025 மாதத்துக்கான குறைதீா் முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இந்த முகாம் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறுவதால், பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள், புகைப்படம் பதிவு செய்தல் தொடா்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்.