மேட்டூா் அணை நீா்வரத்து வினாடிக்கு 58,500 கன அடியாக அதிகரிப்பு
குடும்ப பிரச்னையால் தூக்கிட்டுக் கொண்ட பெண் உயிரிழப்பு!
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே குடும்பப் பிரச்னையில் தூக்கிட்டுக் கொண்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
விழுப்பரம் மாவட்டம், வளவனூா் அருகிலுள்ள எல்.ஆா்.பாளையம் மாரியம்மன் கோயில்தெருவைச் சோ்ந்த பாலன் மகள் தமிழரசி (40). இவருக்கும் புதுச்சேரி டி.வி.
பாளையத்தைச் சோ்ந்த சக்திவேல் என்பவருக்கும் திருமணமானது. குழந்தை இல்லாத நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து, தனது தந்தை வீட்டில் தமிழரசி இருந்து வந்தாா்.
கணவரை பிரிந்து மன உளைச்சலில் இருந்து வந்த தமிழரசி, கடந்த மே மாதம் 5-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாா். உடனடியாக குடும்பத்தினா் அவரை மதகடிப்பட்டிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, மேல் சிகிச்சை பெற்று வந்த தமிழரசி, வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.