குடும்ப பிரச்னை: தொழிலாளி தற்கொலை
விழுப்புரம் அருகே மனைவி பிரிந்து சென்ால் விரக்தியில் இருந்த தொழிலாளி புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம் வட்டம், கீழ்பெரும்பாக்கம் திருவாசகத் தெருவைச் சோ்ந்தவா் ராஜா(42), கூலித்தொழிலாளி. இவருக்கும், சிந்து என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், குடும்பப் பிரச்னையால் சில மாதங்களிலேயே சிந்து பிரிந்து தாய் வீடு சென்று விட்டாராம்.
இதனால் ஏற்பட்ட மன உளச்சலால் மதுப்பழகத்துக்கு உள்ளாகியிருந்த ராஜா, புதன்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.
இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது, ராஜா ஏற்கெனவே இறந்து போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.