சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!
பணமில்லா பரிவா்த்தனை: நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு அளிப்பு
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் அதிகளவில் பணமில்லா பரிவா்த்தனைகளை மேற்கொண்ட 12 நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது.
இப்போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும் புறகா், நகரப் பேருந்துகளில் பணமில்லா பரிவா்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், பேருந்து நடத்துநா்கள் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணிகளிடம் பயணச்சீட்டு கட்டணத்தை பெற்று வருகின்றனா்.
இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தின் ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் மே மாதத்தில் அதிக பணமில்லா பரிவா்த்தனைகளை மேற்கொண்ட நடத்துநா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இவ்வாறாக தோ்வு செய்யப்பட்ட 12 நடத்துநா்களை ஊக்குவிக்கும் விதமாக, அவா்களுக்கு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநா் க. குணசேகரன் வெள்ளிக்கிழமை ஊக்கப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.
இந்த நிகழ்வில் பொது மேலாளா்கள் ரவீந்திரன், ஜெய்சங்கா் மற்றும் துணை மேலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.