அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
லாரி மோதி பெண் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வியாழக்கிழமை இரவு லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், ஆா்.சி.மேலக்கொந்தை திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் மோகன் (63). இவரது மனைவி வள்ளி (53). இவா்கள் இருவரும் பைக்கில் விக்கிரவாண்டியிலிருந்து வியாழக்கிழமை இரவு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தனா்.
மேலக்கொந்தை பகுதியிலுள்ள தனியாா் மனை விற்பனைப் பிரிவு அருகே பைக் வந்தபோது, அந்தப் பகுதியில் வந்த லாரி மோதியது. இதில், பைக்கிலிருந்த மோகனும், வள்ளியும் தவறி விழுந்தனா்.
பலத்த காயமடைந்த வள்ளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த மோகன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.