தூத்துக்குடி: மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற கும்பல்; கண்டித்த ...
குட்கா பொருள்களை வைத்திருந்தவா் கைது
குடவாசல் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என குடவாசல் மற்றும் சுற்றுப் பகுதி கடைகளில் போலீஸாா் சோதனை நடத்தினா்.
அப்போது, வடகண்டம் பகுதியில் உள்ள பெட்டிக் கடையில், குட்கா பொருள்கள் வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த குட்கா பொருள்களை பறிமுதல் செய்து செல்வம் மகன் புவிபாலனை (38) போலீஸாா் கைது செய்தனா்.