செய்திகள் :

குட் பேட் அக்லி டீசர் வெளியானது!

post image

நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் 94 வினாடி கொண்ட டீசர் வெளியானது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தைப் பெற்றுள்ளது.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள குட் பேட் அக்லி படம், பொங்கல் திருநாளின்போது வெளியிடத் திட்டமிருந்த நிலையில், அதே சமயத்தில் விடாமுயற்சியும் வெளியானதால், குட் பேட் அக்லியின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த படத்தின் முதல் மற்றும் இரண்டாம் போஸ்டர்களில் சில குறியீடுகள் இருப்பதாகவும், அவை அஜித் குமாரின் முந்தைய கல்ட் கிளாசிக் படங்களைப் பிரதிபலிப்பதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து, பிப். 6 ஆம் தேதியில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், குட் பேட் அக்லி படத்தின் மீது ரசிகர்களிடையே வழக்கத்தைவிட பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

தூய்மைப் பணியில் பணியாளர்கள் - புகைப்படங்கள்

புனித பூமியான பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிறைவடைந்த நிலையில் தூய்மைப் பணியில் பங்கேற்ற பர்மார்த் நிகேதன் ஆசிரமத்தின் தலைவரான சுவாமி சிதானந்த் சரஸ்வதி.பிரயாக்ராஜில் நடைபெற்ற தூய்மை இயக்கத்தில் பங்கேற்... மேலும் பார்க்க

எம்புரான் பட டப்பிங் பணியில் மஞ்சு வாரியர்!

எம்புரான் படத்தின் டப்பிங் பணியில் நடிகை மஞ்சு வாரியர் ஈடுபட்டுள்ளார். நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்... மேலும் பார்க்க

துருவ நட்சத்திரம்: வெளியீட்டு தேதி அறிவித்த இசையமைப்பாளர்

நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் வெளியீடு குறித்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அப்டேட் கொடுத்துள்ளார்.இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி, 7 ஆண்டுகளுக்கும் ம... மேலும் பார்க்க

கூலி படத்தில் நடிக்கிறேனா? சந்தீப் கிஷன் விளக்கம்!

கூலி படத்தில் சந்தீப் கிஷன் நடித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்க... மேலும் பார்க்க

புதிதாய் தொழில் தொடங்கிய சின்ன திரை ஜோடி!

மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா தம்பதியினர் புதிய தொழில் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.வானொலியில் தொகுப்பாளராக இருந்து சின்ன திரையில் அறிமுகமானவர் மிர்ச்சி செந்தில். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பா... மேலும் பார்க்க