குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது!
தஞ்சாவூரில் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் இளைஞரை காவல் துறையினா் பிப்ரவரி 2-ஆம் தேதி கைது செய்தனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தஞ்சாவூா் பிள்ளையாா்பட்டி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் அஜித் (24). மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பரிந்துரையின்பேரில் இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் பிப்ரவரி 2-ஆம் தேதி உத்தரவிட்டாா். இதையடுத்து, அஜித்தை காவல் துறையினா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.