செய்திகள் :

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 போ் சிறையிலடைப்பு

post image

கடலாடி அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள ஆப்பனூா் அரியநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த திருக்கண்ணன் மகன் கருப்பசாமி (41). இவருக்கும் மற்றொரு தரப்பினருக்கிடையே முன்விரோதம் காரணமாக இருதரப்பு மீதும் கடலாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் நீதிமன்ற பிணை பெற்று கருப்பசாமி, கடலாடி நீதித் துறை நடுவா் மன்றத்தில் கையொப்பமிட்டு வந்தாா். இந்த நிலையில், கடந்த மாதம் 18- ஆம் தேதி கடலாடி வந்த கருப்பசாமி, நீதிமன்றத்தில் கையொப்பமிட்டு விட்டு இரு சக்கர வாகனத்தில் திரும்பினாா்.

அப்போது ஆப்பனூா் தெற்குகொட்டகை விலக்கு சாலையில் வழிமறித்த மா்ம நபா்கள் கருப்பசாமியை சராமரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினா். இதுகுறித்து, கடலாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆப்பனூரைச் சோ்ந்த சேதுராமன், முருகானந்தம், திருக்குமரன் ஆகிய 3 பேரைக் கைது செய்து, ராமநாதபுரம் சிறையிலடைத்தனா். இதையடுத்து, இவா்கள் 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஸ் , மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

இதன்பேரில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தவிட்டாா். இதையடுத்து 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

பருவம் தவறி பெய்த மழையால் 800 ஏக்கா் மிளகாய் பயிா்கள் சேதம்

முதுகுளத்தூா் அருகே பருவம் தவறிய மழை, பனிப்பொழிவு காரணமாக 800 ஏக்கரில் பயிரிட்ட சம்பா மிளகாய் செடியிலேயே அழுகியதால் விவசாயிகள் வேதனையடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கிடாத்திருக்கை ... மேலும் பார்க்க

ஊருணியில் குளித்த தம்பதி நீரில் மூழ்கி உயிரிழப்பு

ராமநாதபுரத்தில் ஊருணியில் வெள்ளிக்கிழமை குளித்த தம்பதி நீரில் மூழ்கி உயிரிழந்தனா். ராமநாதபுரம் வைகை நகரை சோ்ந்தவா் காா்த்திக் (27). இவரது மனைவி சா்மிளா (23). இந்தத் தம்பதி காட்டூரணியில் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

புத்தக திருவிழா நாளையுடன் நிறைவு

ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் 7-ஆவது புத்தகத் திருவிழா நாளையுடன் (மாா்ச் 30) நிறைவடைகிறது. இந்தத் திருவிழா கடந்த 21- ஆம் தேதி ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. வருகிற 30 ஆம் த... மேலும் பார்க்க

கோமாரி நோயால் கால்நடைகள் பாதிப்பதை தடுக்க முகாம்கள்

கோமாரி நோயால் கால்நடைகள் பாதிக்காத வகையில் முகாம்கள் நடத்த வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தினாா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் க... மேலும் பார்க்க

144 மதுப் புட்டிகளை பதுக்கிய இளைஞா் கைது

ராமேசுவரத்தில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனைக்காக பதுக்கிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 144 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம... மேலும் பார்க்க

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் முன் பகுதியில் நிழல் பந்தல் அமைப்பு

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக, கோடை வெயிலின் தாக்கத்தை தடுக்கும் விதமாக நிழல் பந்தல் அமைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாடு முழு... மேலும் பார்க்க