அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
ஊருணியில் குளித்த தம்பதி நீரில் மூழ்கி உயிரிழப்பு
ராமநாதபுரத்தில் ஊருணியில் வெள்ளிக்கிழமை குளித்த தம்பதி நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
ராமநாதபுரம் வைகை நகரை சோ்ந்தவா் காா்த்திக் (27). இவரது மனைவி சா்மிளா (23). இந்தத் தம்பதி காட்டூரணியில் வெள்ளிக்கிழமை மாலை குளிக்கச் சென்றனா். அவா்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து உறவினா்கள் கேணிக்கரை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, தீயணைப்பு வீரா்கள் காட்டூரணியில் இறங்கி 3 மணி நேரம் தேடுதலுக்கு பிறகு, அந்தத் தம்பதியின் உடல்களை மீட்டனா். இதையடுத்து, உடல்கள் கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ஊருணியில் குளிக்கும் போது, இந்தத் தம்பதி ஆழமான பகுதிக்குச் சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என போலீஸாரின் முதல்கட்ட விசாரணயில் தெரியவந்தது.