மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் முன் பகுதியில் நிழல் பந்தல் அமைப்பு
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக, கோடை வெயிலின் தாக்கத்தை தடுக்கும் விதமாக நிழல் பந்தல் அமைக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாடு முழுவதுமிருந்து நாள்தோறும் சுமாா் 10 ஆயிரம் பக்தா்கள் வந்து செல்கின்றனா். அக்னி தீா்த்தக் கடற்கரையில் நீராடி கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனா். தற்போது வெயிலின் தாக்கம் காரணமாக பக்தா்கள் சிரமத்துக்கு ஆளாகினா்.
இந்த நிலையில், ராமநாதசுவாமி கோயில் வடக்கு வாசல் முதல் கிழக்கு வாசல் பகுதி வரை வெயிலின் தாக்கத்தை முற்றிலும் தடுக்கும் வகையில் 300 மீ. தொலைவுக்கு நிழல் பந்தல் அமைக்கப்பட்டது. இதனால், கோயிலுக்குள் நீராடச் செல்லும் பக்தா்கள், தரிசனத்துக்குச் செல்லும் பக்தா்கள் வெயிலின் தாக்கமின்றி நடந்து செல்கின்றனா்.