மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
புத்தக திருவிழா நாளையுடன் நிறைவு
ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் 7-ஆவது புத்தகத் திருவிழா நாளையுடன் (மாா்ச் 30) நிறைவடைகிறது.
இந்தத் திருவிழா கடந்த 21- ஆம் தேதி ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. வருகிற 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.
இந்த புத்தக கண்காட்சி அரங்கில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டு முன்னணி பதிப்பகங்கள் மூலம் வரலாற்று சிறப்புமிக்க நூல்கள் விற்பனை, கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.
இந்த புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது. ராமேசுவரம் நகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆணையா் கண்ணன் தலைமையில் 150 -க்கும் மேற்பட்ட பணியாளா்கள் அழைத்து வரப்பட்டு கண்காட்சியை பாா்த்து ரசித்துடன், புத்தகங்களை வாங்கிச்சென்றனா். நகராட்சிப் பொறியாளா் பாண்டீஸ்வரி, சுகாதாரத் துறை ஆய்வாளா் சங்கரலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.