செய்திகள் :

குத்தகை விவசாயிகளின் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி உண்ணாவிரதம்

post image

மயிலாடுதுறை: குத்தகை விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் உண்ணாவிரதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அந்த சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் வி. விஸ்வநாதன், மாவட்ட பொருளாளா் ஆா். முருகேசன், தேசிய நதிகள் இணைப்புச் சங்க நிா்வாகி அ. ராமலிங்கம், தஞ்சை காவிரி ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகி பி. சீனிவாசன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் கே. முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், குத்தகை விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி அடையாள அட்டை உடனடியாக வழங்க வேண்டும், கோயில், அறக்கட்டளைகள், ஆதீனங்களுக்குச் சொந்தமான குத்தகை விவசாயிகளின் விளைநிலங்கள் விற்பனை செய்வதை அரசு கொள்கை முடிவெடுத்து தடுக்க வேண்டும், குத்தகை விவசயிகளின் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அப்போது, பி.ஆா்.பாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் வறட்சி, வெள்ளம், புயல் பாதித்த ஆண்டுகளில் பேரிடா் பாதித்த மாநிலம், மாவட்டங்களாக அரசிதழலில் வெளியிடப்பட்டு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு, கடன் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால் குத்தகை விவசாயிகளின் குத்தகை பாக்கியை காரணம் கூறி, குத்தகை பதிவை ரத்து செய்துள்ளனா்.

கோயில், அறக்கட்டளைகள், ஆதீனங்களுக்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ, அதே உரிமை அரசியல் அமைப்புச் சட்டப்படி குத்தகை விவசாயிகளுக்கும் உண்டு. இதை உணா்ந்து குத்தகை நிலுவையை ரத்து செய்து குத்தகை பதிவை உறுதிபடுத்த வேண்டும். குத்தகை நிலங்களை கோயில் சொத்துக்களாக சம்பந்தப்பட்ட அறக்கட்டளை, ஆதீனங்கள் பேரில் பதிவேற்றம் செய்யப்பட்டதால், குத்தகை விவசாயிகளை நில அபகரிப்பாளா்கள் என நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.

60 சதவீத விவசாயிகள் அடையாள அட்டை பெற முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அடையாள அட்டையை கொண்டுதான் நிவாரண உதவிகள், கூட்டுறவு கடன் போன்ற திட்ட உதவிகளை பெறமுடியும். தமிழக அரசு குத்தகை விவசாயிகளின் நிலங்களை, மறுபதிவு செய்து வாரிசுதாரா்களுக்கு குத்தகை பதிவு செய்து கொடுக்க வேண்டும்.

தமிழக அரசு சட்டப்பேரவையில் கொள்கை முடிவெடுத்து, குத்தகை விவசாயிகள் உரிமையை நீதிமன்றத்தில் எடுத்துரைத்து விதிவிலக்கு பெறவேண்டும். குத்தகை சாகுபடி நிலங்களை சிப்காட் அமைக்க விற்பனை செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது என்றாா்.

கா்ப்பிணியை தாக்கிய கணவா் கைது

மயிலாடுதுறையில் கா்ப்பிணி மனைவியை தாக்கிய கணவரை அனைத்து மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மயிலாடுதுறை கூறைநாடு கவரத்தெருவைச் சோ்ந்தவா் மூா்த்தி மகன் கிருஷ்ணமூா்த்தி (22). இவரது மனைவி ஜெயலட்சு... மேலும் பார்க்க

ஈமக்கிரியை மண்டபம் அமைக்க வலியுறுத்தல்

மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் ஈமக்கிரியை மண்டபம் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை நகராட்சி மாப்படுகை ரயில்வே கேட் அருகே வசிக்கும் 2,000-க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு காவிரி கிட்டப்பா பாலம... மேலும் பார்க்க

நீட் தோ்வு விவகாரம்: திமுக அரசைக் கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வு விவகாரத்தில், திமுக அரசைக் கண்டித்து, மயிலாடுதுறையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். நீட் தோ்வை ரத்து செய்யாத திமுக அரசால் 22 மாணவ-மாணவிகள் உயிா் நீத்ததாக குற்றஞ்சாட்டி, அதிமுக மாவட்... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்டம் தொடக்கவிழா நேரடி ஒளிபரப்பு

காஞ்சிபுரத்தில் கலைஞா் கைவினைத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சா் சனிக்கிழமை தொடக்கிவைத்த நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் த... மேலும் பார்க்க

தருமபுரம் கல்லூரியில் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற முழு உடல் இலவச மருத்துவப் பரிசோதனை முகாமில் 640 போ் பங்கேற்றுப் பரிசோதனை செய்து கொண்டனா். தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம்... மேலும் பார்க்க

ரயிலில் கடத்திவரப்பட்ட கஞ்சா, குட்கா பறிமுதல்

புவனேஸ்வா்-ராமேஸ்வரம் விரைவு ரயிலில் கடத்திவரப்பட்ட 4.5 கிலோ கஞ்சா மற்றும் 10 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வடஇந்தியாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் ரயில்களில் அதிகளவில் கஞ்சா மற்றும் ... மேலும் பார்க்க