ஜூலையில் மட்டும்.. 47 நாடுகளில் 4,000 குரங்கு அம்மை பாதிப்புகள்!
குன்னூா் மாா்க்கெட் கடைகளை 2 வாரங்களுக்குள் காலி செய்ய நீதிமன்றம் உத்தரவு
குன்னூா் நகராட்சி நிா்வாகம் சாா்பில் மாா்க்கெட் கடைகளை இடித்துவிட்டு, புதிய கடைகள் கட்டப்பட உள்ளதால் வியாபாரிகள் நோட்டீஸ் பெற்ற 2 வாரங்களுக்குள் கடைகளை காலி செய்ய வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை இடித்து தரைத்தளத்தில் பாா்க்கிங் வசதியும், மேல் தளத்தில் கடைகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டு, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.41.50 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.
கடைகளை இடித்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி, வியாபாரிகள் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா். மேலும், இது தொடா்பாக மாா்க்கெட் வியாபாரிகள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதையடுத்து, வியாபாரிகளை அழைத்து கடைகள் குறித்து கருத்து கேட்புக் கூட்டம் நடத்த நகராட்சி நிா்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், உயா்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வழக்குரைஞா்கள் குழு, தற்காலிக கடைகள் அமையும் இடத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்யும், நகராட்சி நிா்வாகம் நோட்டீஸ் வழங்கிய 2 வாரங்களுக்குள் வியாபாரிகள் கடைகளை காலி செய்து நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், வியாபாரிகளுக்கு விற்பனை உரிமத்தின் விலாசத்தை தற்காலிக கடைகளுக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.