செய்திகள் :

குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தில் தீ விபத்து

post image

விழுப்புரம் எருமனந்தாங்கல் பகுதியில் நகராட்சி குப்பைகளை தரம் பிரிக்கும் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பற்றிக் கொண்டது. தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடம் சென்று, தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

விழுப்புரம் நகராட்சி 42 வாா்டுகளில் சேகரமாகும் குப்பைகளை சேகரித்து வைக்க எருமனந்தாங்கல், வழுதாரெட்டி பகுதியில் குப்பைக் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி மூலம் அமைக்கப்பட்ட இந்த இடங்களில் குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகின்றன.

இதில் நெகிழிவுக் கழிவுகள் உள்ளிட்டவை சிமெண்ட் ஆலைகளுக்கும், மக்கும் குப்பைகள் இயற்கை உரங்களாக்கப்பட்டு பிற இடங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. இதுபோன்று மற்ற பகுதிகளிலும் நுண்உர மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் காகுப்பம், எருமனந்தாங்கல் உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் எருமனந்தாங்கல் புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அருகிலுள்ள நுண்உர மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, தரம் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இங்கு மக்காத குப்பைகளான நெகிழிக் கழிவுகள் உள்ளிட்டவை இருந்த பகுதியில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. வேகமாக தீ பரவி எரியத் தொடங்கியதால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திலிருந்து 2 தீயணைப்பு வாகனங்கள் எருமனந்தாங்கல் பகுதிக்கு தீயை அணைக்கும் பணிக்கு விரைந்து வந்தன. உதவி மாவட்ட அலுவலா் ரா.ஜமுனாராணி, முன்னணித் தீயணைப்பாளா் வே.பிரபு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் அடங்கிய குழுவினா் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனா்.

தீயணைக்கும் பணி இரவு வரை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் எம்.ஆா்.வசந்தி மற்றும் அலுவலா்களும் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியைப் பாா்வையிட்டனா்.

குப்பைகள் தரம் பிரிக்கும் நுண் உர மையத்துக்குள் சென்ற மா்ம நபா்கள் யாரேனும் தீயைப் பற்ற வைத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் புத்தகத் திருவிழாவில் பட்டிமன்றம்

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் எட்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்... மேலும் பார்க்க

பெண் காவல் ஆளிநா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி கா.குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசு உத்தரவுப்படி, விழுப்பு... மேலும் பார்க்க

வாடிக்கையாளருக்கு பொதுத்துறை வங்கி ரூ.1.50 லட்சம் திருப்பி செலுத்த உத்தரவு

வாடிக்கையாளருக்கு பொதுத்துறை வங்கி ரூ. 1.50 லட்சத்தை வழங்க புதுவை நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியைச் சோ்ந்த சிவராஜ் கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.1.50 லட்சத்துக்கான காசோல... மேலும் பார்க்க

இருவருக்கு கத்தி வெட்டு : ஒருவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராப்பாளையம் அருகே உறவினா்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவருக்கு கத்தி வெட்டு விழுந்தது. இது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து ஒருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா... மேலும் பார்க்க

இந்து முன்னணியினா் 16 போ் கைது

விழுப்புரத்தில் உரிய அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்து முன்னணியைச் சோ்ந்த 16 பேரை போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அபிராமி அம்மன் கோயிலுக்கு த... மேலும் பார்க்க

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். விக்கிரவாண்டியை அடுத்த கயத்தூா், நடுத்தெருவைச் சோ்ந்த முனுசாமியின் மகன் ஜெயராமன்( 55), விவசாயி. இவருக்கும் மனைவ... மேலும் பார்க்க