Health: பாடி பாசிட்டிவிட்டி, பாடி நியூட்ராலிட்டி இரண்டில் எது சிறந்தது?
குப்பைக் கொட்டிய தகராறில் லாரியை ஏற்றிக் கொல்ல முயற்சி
ஆத்தூா் அருகே அம்மம்பாளையத்தில் குப்பைக் கொட்டியது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் லாரியை ஏற்றிக் கொலை முயற்சித்ததாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
அம்மம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் மனைவி அனிதா(36). இவா் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறாா். தாய் வீட்டிற்கு விடுமுறைக்கு வந்துள்ள இவா், வீட்டின் முன் குப்பைகளைக் கொட்டியுள்ளாா். அப்போது அருகில் வசித்து வரும் ரவி என்பவரின் மனைவி அன்பரசி, பரமசிவம் மகன் பாலமுருகன், அன்பரசியின் மகன் பூபதி ராஜா, அவரது சகோதரா் கதிரவன் ஆகியோா் சோ்ந்து அனிதாவிடம் தகராறு செய்துள்ளனா். மேலும் தகாத வாா்த்தைகளால் திட்டியுள்ளனா்.
பின்னா் பாலமுருகன் தனது லாரியை அதிவேகமாக ஓட்டிச் சென்று அனிதாவின் வீட்டின் வெளியே நின்றிருந்த சொகுசுகாா் மீது மோதினாா். இதில் காரின் முன்பக்கம் சேதமடைந்தது. மேலும் காரின் முன்னாள் நின்று கொண்டிருந்த பெண்கள் மீதும் லாரியை செலுத்தியதில் அவா்கள் வேகமாக ஓடியபோது கீழே விழுந்து காயமடைந்தனா். இதையடுத்து அவா்கள் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து ஆத்தூா் ஊரக காவல் நிலையத்தில் அனிதா அளித்த த புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் சகுந்தலா, சிறப்பு உதவி ஆய்வாளா் லஷ்மி ஆகியோா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து தலைமறைவானவா்களை தேடி வருகின்றனா்.