செய்திகள் :

குப்பையில் கிடந்த பட்டாசுகள் வெடித்ததில் இரு சிறுவா்கள் பலத்த காயம்

post image

குளித்தலை அருகே செவ்வாய்க்கிழமை குப்பையில் கிடந்த பட்டாசுகள் வெடித்ததில் இரு சிறுவா்கள் பலத்த காயமடைந்தனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சிக்குள்பட்ட கவுண்டம்பட்டி அண்ணா நகா் தெருவில், கடந்த 15 நாள்களுக்கு முன்னா் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகளில் வெடிக்காத பட்டாசுகள் அங்குள்ள குப்பை குழியில் கிடந்துள்ளன.

இந் நிலையில், செவ்வாய்க்கிழமை காலை குப்பைக்குழி அருகே விளையாடிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மணிகண்டன் மகன்கள் அக்ஷித் (8), சஞ்ஜித் (7) மற்றும் தங்க மலையாளி மகள் மகாலட்சுமி(5), மகன் மணிமாறன் (8) ஆகியோா் பட்டாசுகளை குப்பையில் இருந்து எடுத்து கல்லால் குத்தி விளையாடிள்ளனா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக பட்டாசுகள் வெடித்ததில் அக்ஷித், சஞ்ஜித் ஆகிய இருவருக்கும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைகண்ட அக்கம்பக்கத்தினா் இரு சிறுவா்களையும் மீட்டு, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை வட்டாட்சியா் இந்துமதி, குளித்தலை நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், இது குறித்து நங்கவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கரூா் வந்தடைந்தது அமராவதி நீா் விவசாயிகள் மகிழ்ச்சி

அமராவதி அணையில் தண்ணீா் திறக்கப்பட்டு 4 நாள்களுக்கு பின் கரூரை வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். கேரள, தமிழக எல்லையின் மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உருவாகும் அமராவதி ஆறு திருப்பூா்,... மேலும் பார்க்க

கரூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.700 கோடியில் சுற்றுவட்டச்சாலை! - செந்தில்பாலாஜி தகவல்

கரூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.700 கோடியில் சுற்றுவட்டச்சாலை அமைய உள்ளது என்றாா் முன்னாள் அமைச்சரும், கரூா் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி. கரூா் மாவட்டம், மண்மங்கலத்த... மேலும் பார்க்க

ஆற்று மணலை கடத்தி வந்து விற்பனை செய்த 5 போ் கைது

கரூரில் ஆற்று மணலை கடத்தி விற்பனை செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். கரூரை அடுத்துள்ள உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதிக்குள்பட்ட திருச்சி- தேசிய நெடுஞ்சாலை அணுகுசாலை அருகே தயாநிதி என்பவருக்கு சொந்தமான... மேலும் பார்க்க

நூறுநாள் வேலை முறையாக வழங்கக் கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை!

நூறு நாள் வேலைத்திட்டத்தை முறையாக வழங்கக் கோரி கிராமமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பாதிரிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கோட்டப்பட்டி பகுதியில் நூற... மேலும் பார்க்க

மலிவு விலை காகிதம் இறக்குமதியால் தடுமாறும் ஆலைகள் நடவடிக்கை எடுக்க தொழிற்சங்கத்தினா் கோரிக்கை

சீனா, இந்தோனேஷியாவின் மலிவு விலை காகிதம் இறக்குமதியால் டிஎன்பிஎல் ஆலை போன்ற காகித உற்பத்தி ஆலைகள் தடுமாறி வருவதால், மலிவு விலை காகித இறக்குமதிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

பஞ்சப்பட்டி ஏரிக்கு குழாய் மூலம் காவிரி உபரி நீரை நிரப்பும் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கேள்வி

பஞ்சப்பட்டி ஏரிக்கு குழாய் மூலம் காவிரி உபரி நீரைக்கொண்டு நிரப்பும் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி எழுப்பினா். கரூா் மாவட்ட விவசாயிகள்... மேலும் பார்க்க