செய்திகள் :

குமரி: ஹோட்டலில் QR Code-ஐ மாற்றி ரூ.14 லட்சம் மோசடி - ஊழியரையும், உறவினர் பெண்ணையும் தேடும் போலீஸ்

post image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பீச்ரோடு சந்திப்பை சேர்ந்தவர் ஆஸ்டின் ( 48). இவர் அந்த பகுதியில் பரோட்டா கடை  நடத்தி வருகிறார். ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பணத்தை செலுத்த க்யூ.ஆர் கோடு ஸ்கேனர் வசதி செய்யப்பட்டிருந்தது. அதில் ஆஸ்டினின் வங்கி கணக்கு இணைக்கப்பட்டு இருந்தது. இவரது ஓட்டலில் பூதப்பாண்டியை சேர்ந்த இவரின் உறவினர் வேணுகுமார் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக கணக்குகளை கவனித்து வந்தார்.

QR Code-ஐ மாற்றி...

ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த ஆஸ்டினின் வங்கிக்கணக்கு இணைக்கப்பட்ட க்யூ.ஆர் கோடை மாற்றிவிட்டு, அதில் தனது வங்கி கணக்கின் க்யூ.ஆர் கோடை ஒட்டி வைத்துள்ளார் வேணுகுமார். ஓட்டலில் சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு பில் தொகையை க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்தியுள்ளனர். அந்த பணம் வேணுகுமாரின் வங்கிக்கணக்குக்கு சென்றுள்ளது.

வேணுகுமார்

இதற்கிடையே ஓட்டலில் வருவாய் குறைவாக வருவதாக ஆஸ்டினுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து தனது வங்கி கணக்குகளை ஆஸ்டின் சரி பார்த்தபோது க்யூ.ஆர். கோடு மூலம் செலுத்தும் பணம் தனது வங்கி கணக்கில் வராமல் இருப்பதை கண்டுபிடித்தார். அந்த கியூ.ஆர் கோட் குறித்து விசாரித்ததில் வேணுகுமார் தனது வங்கி கணக்கின் க்யூ.ஆர் கோடை இணைத்து மோசடி செய்தது தெரியவந்தது.

க்யூ.ஆர் கோடை மாற்றி சுமார் 14 லட்சம் ரூபாய் வரை தனது வங்கி கணக்கில் பெற்று வேணுகுமார் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த பணத்தில் ஒரு பங்கை தனது உறவினரான சென்னையைச் சேர்ந்த மீனா (27) என்ற பெண்ணுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார் வேணுகுமார்.

மீனா

வேணுகுமாரின் மோசடி குறித்து நாகர்கோவில் நீதிமன்றத்தில்  ஆஸ்டின் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வேணுகுமார் மற்றும் மீனா மீது நடவடிக்கை எடுக்க கோட்டார் போலீஸாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் கியூ.ஆர் கோட் மூலம் மோசடி செய்ததாக வேணுகுமார் மற்றும் மீனா ஆகிய 2 பேர்  மீதும் கோட்டார் போலீஸார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாக இருக்கும் இரண்டு பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனை; தஞ்சையில் சிக்கிய கும்பலின் பின்னணி!

தஞ்சாவூர் கீழவாசல் தட்டான்தெரு பகுதியில் இளைஞர்கள் சிலர் மாத்திரையை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் நரம்பில் செலுத்தி போதை ஏற்படுத்திக்கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இத்தகைய போதைப்பழக்க... மேலும் பார்க்க

மசினகுடி: தந்தங்கள் மாயமான நிலையில் கிடந்த யானையின் எலும்புக்கூடு; வனத்துறை விசாரணை!

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யானைகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் உள்ளது. இந்த நிலையில், மசினகுடி அருகில் உள்ள பொக்குபுரம் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் யானையின... மேலும் பார்க்க

சென்னை: தொழிலதிபருக்கு ஷாக் கொடுத்த இளம்பெண் - ஆண் நண்பருடன் கைதானவரின் பகீர் பின்னணி!

சென்னை, ஆவடி பகுதியில் வசித்து வருபவர் மணி (47). இவர் கடந்த 27.07.2025-ம் தேதி அவருக்கு தெரிந்த பெண் தோழி தீபிகா என்பவருடன் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலுக்குச் சென்றார். பின்னர் அங்க... மேலும் பார்க்க

யூடியூப் பார்த்து ஸ்கெட்ச்; ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரைக் கொன்ற மனைவி சிக்கியது எப்படி?

தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரின் மனைவிதான் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து யூடியூப் வீடியோ பார்த்து திட்டம் போட்டு கொலைசெய்திருக்கிறார் என்பது வெளிச்... மேலும் பார்க்க

'தமிழ்நாடே அவர்களுக்கு சொந்தமா... இது அவமானம்' - திமுக மீது வானதி சீனிவாசன் விமர்சனம்

கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், “இந்தியாவின் முன்னேறிய மாநிலமாக தமிழகத்தை கூறுகிறார்கள். சிவகங்கை மாவட்டம், நாட்டாக்கு என்கிற ஒட்டுமொத்த கிராமத்தையும் இரவோ... மேலும் பார்க்க

கோவை காவல் நிலையத்தில் தற்கொலை செய்தவருக்கு நடந்தது என்ன? - அக்கா கண்ணீர் பேட்டி

கோவை, பேரூர் அருகே உள்ள ராமசெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். சென்டரிங் வேலை செய்து வந்தார். இவர் நேற்று இரவு பெரியகடை வீதி காவல் நிலையம் சென்றுள்ளார். அங்கு, ‘என்னை வெட்டுவதற்காக 50 பேர் துர... மேலும் பார்க்க