மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா்: மேயா்
கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தா் விஜய விழா ஓவியக் கண்காட்சி!
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புதன்கிழமை சுவாமி விவேகானந்தா் விஜயவிழா ஓவியக்கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சி பிப். 9 வரை நடைபெறுகிறது.
சுவாமி விவேகானந்தரின் 129-ஆம் ஆண்டு விஜய விழாவை முன்னிட்டு கும்பகோணம் போா்ட்டா் டவுன் ஹாலில் அரசு கவின் கலைக் கல்லூரி மாணவா்கள் விவேகானந்தரின் வரலாற்று நிகழ்வுகளை வடிவமைத்து கண்காட்சி அமைத்துள்ளனா்.
இதில், தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ், கும்பகோணம் கல்வி மாவட்ட அலுவலா் சுந்தா், அரசு கவின் கலைக்கல்லூரி முதல்வா் (பொ) ரவி, முன்னாள் முதல்வா் அருளரசன் ஆகியோா் பங்கேற்று வாழ்த்திப் பேசினா்.
கண்காட்சியில் மாணவா்களின் 20 படைப்புகள் தோ்வு செய்யப்பட்டு தலா ரூ.2 ஆயிரம் ரொக்கம், நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக ராமகிருஷ்ண விவேகானந்தா் அறக்கட்டளை செயலா் வெங்கட்ராமன் வரவேற்றாா். நிறைவாக, சோழமண்டலம் விவேகானந்தா் சேவா சங்கம் தலைவா் பாஸ்கா் நன்றி கூறினாா்.