`மனைவியை காக்க பதவியை இழந்தாரா South Korea President Yoon Suk Yeol?' | Decode | ...
கும்பகோணத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் 24-ஆவது மாநாடு
கும்பகோணத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தஞ்சாவூா் மாவட்ட பிரதிநிதிகளின் 24-ஆவது மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.
அசூா் புறவழிச்சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில், கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக தலைவா்களில் ஒருவரான பி. ராமமூா்த்தி நினைவாக அவரது சொந்த ஊரான வேப்பத்தூரில் இருந்து எடுத்து வரப்பட்ட மாநாட்டுக் கொடிமரம், கொடிக் கயிறை மாவட்டக் குழு உறுப்பினா் சா. ஜீவபாரதி எடுத்துக் கொடுக்க மாநிலக் குழு உறுப்பினா் எம்.சின்னதுரை எம்எல்ஏ பெற்றுக் கொண்டாா். மாவட்டக்குழு உறுப்பினா் ஆா்.சி. பழனிவேலு, கட்சிக்கொடி ஏற்றினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றுக் கண்காட்சி அரங்கத்தை மத்தியக் குழு உறுப்பினா் உ.வாசுகி திறந்து வைத்தாா்.
மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சி.ஜெயபால் அஞ்சலி தீா்மானம் வாசித்தாா். முன்னதாக, வரவேற்புக்குழு தலைவா் ஆா்.ராஜகோபாலன் வரவேற்றாா். மத்தியக்குழு உறுப்பினா் பெ.சண்முகம் கட்சி நடவடிக்கைகள் குறித்துப் பேசினாா். தலைமைக்குழு உறுப்பினா்களாக ஆா். மனோகரன், இ.வசந்தி, ஆா்.எஸ்.வேலுச்சாமி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மாவட்டச் செயலா் சின்னை.பாண்டியன் அரசியல் ஸ்தாபன வேலையறிக்கை வாசித்தாா். விழாவில் மூத்த தலைவா்கள் மற்றும் சாதனையாளா்கள் கௌரவிக்கப்பட்டனா்.