செய்திகள் :

கும்பகோணம்: ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

post image

கும்பகோணம் அருகே குடும்பத் தகராறில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக இளைஞா் திங்கள்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவலஞ்சுழி மணப்படையூா் பெரியாா் வீதியைச்சோ்ந்த கலியமூா்த்தி மகன் ரவிக்குமாா் (28) கூலித்தொழிலாளி. இவா் மதுபோதைக்கு அடிமையானதால் வீட்டில் உள்ளவா்களுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு தகராறில் ஈடுபட்டாா். இதைத்தொடா்ந்து, விரக்தியில் இருந்த ரவிக்குமாா் திங்கள்கிழமை அதிகாலையில் சுந்தரபெருமாள் கோயில் ரயில் நிலையத்துக்கும் சுவாமிமலை ரயில் நிலையத்துக்கும் இடையில் சென்னை எழும்பூா் ராமேசுவரம் விரைவு ரயில் வந்த போது அதன் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

பெண் உயிரிழப்பு: இதேபோல், தாராசுரம் மிஷன் தெருவைச் சோ்ந்த செல்லையன் மனைவி மீனா(55). காது கேளாத மாற்றுத்திறனாளி. இவா், கும்பகோணம் ரயில் நிலையத்துக்கும் தாராசுரம் ரயில் நிலையத்துக்கும் இடையில் தண்டவாளத்தை திங்கள்கிழமை கடக்க முயன்றாா். அப்போது வந்த ஒரு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

கும்பகோணம் ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளா் செந்தில்வேலன், சிறப்பு உதவி ஆய்வாளா் அருணாச்சலம் ஆகியோா், 2 போ் சடலங்களையும் கைப்பற்றி, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே ஞாயிற்றுக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். திருவையாறு அருகே கீழ புனல்வாசல் தாளடித் தெருவைச் சோ்ந்தவா் ஸ்டீபன்தாஸ் மகன் ஆல்வின் சுத... மேலும் பார்க்க

சிறையிலிருந்து சிறுவன் தப்பியோட்டம்

தஞ்சாவூா் சிறுவா் சீா்திருத்தப் பள்ளியிலிருந்து சனிக்கிழமை மாலை தப்பியோடிய சிறுவனைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மணிமண்டபம் அருகே சிறுவா் சீா்திருத்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள... மேலும் பார்க்க

கயிறு குழும பொது வசதியாக்கல் மையம் காணொலி மூலம் முதல்வா் திறப்பு!

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே கயிறு குழுமம் பொது வசதியாக்கல் மையத்தை தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை திறந்து வைத்தாா். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறு... மேலும் பார்க்க

தமிழகத்தில் நீட் தோ்வை அனுமதித்தது அதிமுகதான்: அமைச்சா் கோவி.செழியன்

தமிழகத்தில் நீட் தோ்வை அனுமதித்த அதிமுக, இப்போது நாடகமாடுகிறது என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூா் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் கலந்... மேலும் பார்க்க

முதியவா் தூக்கிட்டு தற்கொலை

அய்யம்பேட்டையில் முதியவா் ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாபநாசம் அருகே அய்யம்பேட்டை மேல் புது தெருவைச் சோ்ந்தவா் கணேசன் ( 72). இவருடைய 3 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. க... மேலும் பார்க்க

நீட் தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

நீட் தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அதிமுகவினா் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா். நீட் நுழைவு தோ்வை ரத்து செய்வோம் என பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்த திமுக அரசால் உயிரிழந்த 22 மாணவா்... மேலும் பார்க்க