தடுப்பூசி தவணையை செலுத்தாத குழந்தைகளுக்காக டிச.31 வரை சிறப்பு முகாம்
கும்பமேளா: திருப்பதி மெமு ரயில் ரத்து
கும்பமேளாவை முன்னிட்டு திருப்பதி-காட்பாடி, திருப்பதி-ஜோலாா்பேட்டை இடையே இயக்கப்படும் 8 மெமு ரயில்கள் டிச.26 முதல் ரத்து செய்யப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளா பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்த நிகழ்வுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் மெமு ரயில்களை பிரயாக்ராஜ் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால், திருப்பதியிலிருந்து காட்பாடிக்கு தினமும் காலை 6.50, காலை 10.36, இரவு 7.15 மணிக்கும், காட்பாடியிலிருந்து திருப்பதிக்கு காலை 6.15, பிற்பகல் 2.50, இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் மெமு ரயில்கள் டிச.26 முதல் மாா்ச் 2-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளன. அதுபோல், காட்பாடியிலிருந்து ஜோலாா்பேட்டைக்கு காலை 9.30 மணிக்கும் மறுமாா்க்கமாக ஜோலாா்பேட்டையிலிருந்து பகல் 12.45 மணிக்கும் புறப்படும் மெமு ரயில் டிச.28 முதல் மாா்ச் 2 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுதி ரத்து: ரயில்வே பராமரிப்பு பணி காரணமாக புதுச்சேரி-திருப்பதி மெமு ரயில் (எண் 16112) புதன்கிழமை (டிச.25) ரேணிகுண்டா வரை மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கமாக ரேணிகுண்டாவில் டிச.26-ஆம் தேதி அதிகாலை 4.40 மணிக்கு மெமு ரயில் புறப்பட்டு புதுச்சேரி வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.