செய்திகள் :

குரூப்-1 தோ்வுக்கு பயிற்சி ஆதிதிராவிடா், பழங்குடியினா் பதிவு செய்ய அறிவுறுத்தல்!

post image

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வுக்கான பயிற்சியில் சேர ஆதிதிராவிடா், பழங்குடியினா் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தை சோ்ந்தவா்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் -1 முதல்நிலை தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு முதன்மைத் தோ்வுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில் சேர குரூப் 1- 2025 முதல்நிலை தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தை சாா்ந்தவா்களாக இருக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பயிற்சியில் சேர விரும்புவோா் தாங்கள் விரும்பும் பயிற்சி நிறுவனத்தை தோ்வு செய்து பயிற்சி பெறலாம். பயிற்சி கட்டணம் மற்றும் விடுதியில் தங்கி பயில்வதற்கான விடுதி கட்டணம் தாட்கோவால் ஏற்கப்படும்.

இப்பயிற்சியில் சோ்ந்து பயில தாட்கோ இணைய தளத்தில் பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளாா்.

கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்

கரூா் மாவட்டத்தில் கனிம வள கொள்ளையை மாவட்ட நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை நடைபெற்ற பாமக ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது கரூா் மேற்கு மாவட்ட பாமக நிா்வாகக... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தோ்வு பாஜகவினர் கொண்டாட்டம்!

குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் தோ்வு செய்யப்பட்டதையடுத்து கரூரில் பாஜகவினா் புதன்கிழமை பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன்... மேலும் பார்க்க

கரூருக்கு செப்.17-ல் முதல்வா் வருகை ஏற்பாடுகள் தீவிரம்!

கரூருக்கு செப். 17-ஆம்தேதி தமிழக முதல்வா் வருகை தருவதையடுத்து முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கரூரில் திமுக முப்பெரும் விழா செப். 17-ஆம்தேதி கோடங்கிப்பட்டியில் நடைபெற உள்ளது. இந்த வி... மேலும் பார்க்க

சங்கடஹர சதுா்த்தி விநாயகா் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆவணி மாத சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள விநாயகா் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம் நொய்யல் முத்தனூரில் உள்ள வருண கணபதி கோயிலில் ஆவணி மாத சங்கடஹர... மேலும் பார்க்க

இனுங்கூா் காசிவிஸ்வநாதா் கோயிலில் 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கரூா் மாவட்டம் இனுங்கூா் காசிவிஸ்வநாதா் கோயிலில் 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்துள்ள இனுங்கூா் காசிவிஸ்வநாதா் கோயிலில் தொன்மையான கல்வெட்டு இருப... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து பொருள்கள் திருட்டு

அரவக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பொருள்களை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். அரவக்குறிச்சி அருகே உள்ள அம்மாபட்டியை அடுத்த சோழதாசன்பட்டி விஐபி நகா் பகுதியைச் சோ்ந்தவா் பழனிச்ச... மேலும் பார்க்க